பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

இ-ள், அறத் திறம் முப்பத் தெட்டால் - அறத்தின் கூறுபாடு முப்பத் தெட் டதிகாரங்களாலும், பொருட் டிறம் எழுபதால்-பொருட் கூறுபாடு எழுப ததிகாரங்களாலும், இன்பத் திறம் இருபத்தைந்தால் - காமத்தின் கூறுபாடு இருபத்தைந் ததிகாரங்களாலும், தெளிய-தெளியும் பொருட்டு முறைமையால் வேதவிழுப் பொருளை வெண் குறளால் வள்ளுவனார் ஓத - காரண காரிய வொழுங்கால் வேதத்தி னுயர்வாகிய பொருளைக் குறள் வெண்பாக்களாலே திருவள்ளுவனார் ஓதலால், உலகு வழுக்கு அற்றது - உலகமானது வழுவுதலினின்றும் நீங்கிற்று.

திறமும் ஆலும் முன்னுங் கூட்டப்பட்டன. உயர்வாகிய பொருள் - கரும காண்டம் பிரம காண்ட மிரண்டினுள்ளும் சிறந்த பொருள். வழுக்குதல் - விதியை விலக் கென்றும் விலக்கை விதி யென்றும் கோடல், 'உலகு' மக்களை யுணர்த்தி நின்றது. துணிவு பற்றி அற்ற தென இறந்த காலத்தாற் கூறினார். முன்னதின் வேறுபட்ட முப்பால்களின் அதிகாரத் தொகைகளோடு உலகிற்கு விளையும் நன்மை சொல்லிய படி. (௩௰௭)

கோவூர்க் கிழார்.

அறமுத னான்கு மகலிடத்தோ ரெல்லாந்
திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பான்முறைநே ரொவ்வாதே
முன்னை முதுவோர் மொழி.

இ-ள். அறமுதல் நான்கும் அக லிடத்தோர் எல்லாம் திறம் உறத் தேர்ந்து தெளியக் குறள் வெண்பாப் பன்னிய வள்ளுவனார் பான் முறை - அறம் முதலிய நான்கு பொருள்களையும் மண்ணுலகத் துள்ளோ ரெல்லாம் வகைப்பட ஆராய்ந்து தெளியும் பொருட்டுக்

41

6