பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

மாக உபசரித்தார். ஓதார்க்கு உளவாகாமை கூறவே, ஓதுவோர்க்கு இவை உள. ஆகலின், வாக்கிற்குக் கடுஞ்சொல், பொய், கோள், புறங்கூறல்களும், மனத்திற்குப் பிறனில் விழைதல், பிறன் பொருள் விழைதல், பிறன் பொருட்குக் கேடெண்ணல், பிற வயிர்க் கிறுதி யெண்ணல்களும், காயத்திற்குப் பிறன்மனை புணர்தல், உயிர்க் கொலை செய்தல், பழி யூ ணுணல், பிறர் பொருள் வௌவல்களும், ஆகிய குற்றங்க ளெல்லாம் நீங்கு மென்பது பெறப்பட்டது. அற வின்பங் கட்குக் காரண மாதற் சிறப்புடைய பொருட் பேறு இஃ தோதலின் உளதா மென்ற படி. (௩௰௯)

இழிகட் பெருங் கண்ணனார்.

இம்மை மறுமை யிரண்டு மெழுமைக்குஞ்
செம்மை நெறியிற் றெளிவுபெற-மும்மையின்
வீடவற்றி னான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடின ரின்குறள்வெண் பா.

இ-ள். இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும் செம்மை நெறியின் தெளிவு பெற-இக பரங்கட் காவன விரண்டையும் வினைப் பயன் றொடர்தற் குரிய எழு பிறப்பிற்குமாகச் செவ்வையான வழியால் யாவரும் தெளிதல் பெறவும், மும்மையின் அவற்றின் வீடு நான்கின் விதி வழங்க - அறம் பொருள் இன்ப மென்னும் முப்பால்களுள் அம் முப்பாற் பொருள்களோடு வீடுமாகிய நாற் பொருள்களது விதிகளும் வழங்கவும், வள்ளுவனார் இன் குறள் வெண்பாப் பாடினர் - திருவள்ளுவ நாயனார் இனிய குறள் வெண்பாவைப் பாடினர்.

செவ்வையான வழி, விதியும் பத்தியும் ஞானமும், நோயாளிக்கு மருந்தும் அனுபானமும் பத்தியமும் போல், ஒன்றற் கொன்று முர

43