பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

ணாது கூடி நிற்கும் வழி. வீட்டு விதி துறவறத்திற் காண்க. இம்மை மறுமை வீடு மூன்றும் பயக்குமாறு சொல்லிய படி. (௪௰)

செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்.

ஆவனவு மாகா தனவு மறிவுடையார்
யாவரும் வல்லா ரெடுத்தியம்பத்- தேவர்
திருவள்ளுவர் தாமுஞ் செப்பியவே செய்வார்
பொருவி லொழுக்கம்பூண் டார்.

இ-ள். ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார் யாவரும் எடுத்தியம்ப வல்லார் - மக்களுக்கு ஆவனவற்றையும், ஆகாதவற்றையும் அறிவுடையார் யாவரும் இனி இதிலிருந்து எடுத்துச் சொல்லுதற்கு வல்லவராவார்; தேவர் திருவள்ளுவர் செப்பியவே பொருவில் ஒழுக்கம் பூண்டார் செய்வார்-ஆதலால், தேவராகிய திருவள்ளுவராலே சொல்லப்பட்டவற்றையே ஒப்பில்லாத் ஒழுக்கத்தை மேற்கொண்டவர் செய்வார்.

இங்ஙனங் கூறவே, அவ் வேதத்திலிருந்து உள்ளவா றெடுத்துச் சொல்லுதல் அறிவுடையார்க்கு முடியாமையால், ஒழுக்கம் பூண்டார்க்கு அதன்கண்ணே சொல்லப்பட்ட படி வழுவாமற் செய்தல் கூடாமை காட்டப்பட்டது. 'தாம்', 'உம்' அசைகள். ஆவன - இன்பத்தைத் தருவன. ஆகாதன-துன்பத்தைத் தருவன. ஒப்பில்லாத ஒழுக்கம் - கொல்லாமை முதலியன. போத காசிரியருக்கும், கேட் டொழுகுவோர்க்கும் வரும் நன்மை சொல்லிய படி. (௪௰௧)

செயலூர்க் கொடுஞ்செங் கண்ணனார்.

வேதப் பொருளை விரகால் விரித்துலகோ
ரோதத் தமிழா லுரைசெய்தா-ராதலா
லுள்ளுந ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.

44