பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்


வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரு மொக்குமெனக்
கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு.

இ-ள். உள்ளக் கமலம் மலர்த்தி உளத்து உள்ள தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் - நெஞ்சமாகிய தாமரை மலரை மலர்த்தி மக்களது அகத்தி லுள்ள பிறி தொன்றனாலே நீக்கப்படாத அஞ்ஞான விருளை நீக்குதலால், வள்ளுவனார் வெள்ளைக் குறட்பாவும் வெங் கதிரும் குணத்தைக் கொண்டு ஒக்கும் எனக் கொள்ளத் தகும்-திருவள்ளுவரது குறள் வெண்பாவும் புறத்துத் தாமரை மலரை மலர்த்திப் புறத் திருளை நீக்குகின்ற சூரியனும் அச் செய்கையைக் கொண்டு ஒக்கு மென்று கொள்ளத் தகும்.

செயலும் தொழிற் பண் பெனப்படுதலின், குண மெனப் பட்டது; அது மலர்த்தலும் தள்ளுதலு மாம். குணத்தைக் கொண்டெனவே, செயப்படு பொருளைக் கொண்டு ஒக்கு மெனக் கொள்ளத் தகா தென்ற தாயிற்று. உலகுக் கெல்லாம் பே ரொளியாகிய சூரியனும் இதற்கு ஒரு புடை யொப்பா மென்ற படி. (௪௰௮)

தேனீக்குடிக் கீரனார்.

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே-முப்பாலின்
றெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.

இ-ள். தெய்வத் திருவள்ளுவர் முப்பாலிற் செப்பிய குறளால்-தெய்வத் தன்மையை யுடைய திருவள்ளுவ நாயனார் மூன்று பால்களை யுடைய தாகக் கூறிய குறணூலைக் கேட்டறிதலால் வையத்து வாழ்வார் மனத்துப் பொய்ப் பால் பொய்யேயாய்ப் போயின; - உலகின்கண் வாழ்வாருடைய மனத்துப் பொய்யின் பகுதியிற்

50