பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருவள்ளுவர் திருக்குறள்

தென்னிய அமுதினது, தித்திப்பாகிய சுவையும் ஒப்பாகாது. தெள் ளமுதம் உண்டு அறிவார் தேவர்—அத் தெள்ளிய அமுதை யுண்டு அதன் சுவையை அறிபவர் தேவர்கள், வண் டமிழின் முப்பால் உல கடைய மகிழ்ந்து உண்ணும்—வளம் பொருந்திய தமிழின் கண்ணதாகிய முப்பாலாகிய அதின் மும் மடி சிறந்த பாலை 'எல்லா வுலகத்தாரும் மகிழ்ந்து உண்டு தீஞ் சுவை யறிவார்.

‘வளம்’ ஆகு பெயர், ‘ஆல்’ அசை. அவ் அமிர்தம் வாயுட் பெய்தவழி நாவிற் பட்ட சிறிது பொழு தளவே தீஞ் சுவை பயப்பது; இப் பாட்டு நெஞ்சின்க ணிலை பெற்று ஒழி வின்றித் திஞ் சுவை பயத்தலின், ஒவ்வா தென்றார். ‘முப்பால்’ சிவிஷ்ட ரூபகம், இனி எவ் வுலகத்தாருக்குங் கரும பூமியாகிய இவ் வுலகத்துட் டோன்றி மெய்ப்பொரு ளுணர்ந்தன்றி வீட்டின்பம் பெறுதல் கூடாமையின், உல கடைய வுண்ணு மென்றார். அன்றி அவ் வுலகத்துத்  தேவர்களும் தமது மேற்பட்ட வறிவினாலே இதனது உயர் வொப்பற்ற குணத்தை அறிந்து முக்கியப் பிரமாணமாகக் கொண்டு மகிழ் கூர்வ ரென்பது பற்றி, அங்ஙனங் கூறினா ரெனினும் அமையும். இஃது இவ் வுலகத்தார்க்கே யன்றி அவ் வுலகத்தார்க்கும் பயன் படுமாறு சொல்லிய படி, (௫௰௩) 

இடைக்காடர்.

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.

இ-ள். குறள்—நாயனாரது நூலின் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் வெண்பாக்களும், கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த—கடுகை அதன் நடுவே துளை செய்து எழு கட னீரையும் அத் துளையுட் பெய்து தன் னளவிற் குறுகும் வண்ணம் தறித்து வைத்தா லது போல்வன வாகும்.

54