பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறப்புப் பாயிரம்.


மிக்க சிற்றளவிற்கு எடுத்துச் சொல்லப்படுவ தொரு நுண் பொருளாகலின், கடுகு சொல்லப்பட்டது. இரண்ட, னுருபு, தறித்த வென் வினை கொண்டது. துளைத்தல்—உள்ளீடு போக்குதல். புகலிடென்பது புகட்டென விகாரப்பட்டு முதனிலையாய் நிற்றலின் புகட்டி யென்றாயது. துளையி னிடைவெளிக்கும் அதன் புற மூடிக்கும் கொள்ளப் பட்ட பங்கு சிறிதாக ஒழிந்த பங்கு பெரிதாகலின், குறுக வென்றார். தறித்தா லன்ன வெனற் பாலது தறித்த லென இடைக் குறைந்து நின்றது. இல்லாத பொருளை உவமானமாகக் கூறலின், இல் பொருளுவமை. குறட்பாக்களுள் ஓவ்வொன்றும் அது போறலின், தறித்த வெனப் பன்மையாற் கூற லாயிற்று. ‘குறள்’ பால் பகா வஃறிணைப் பெயராகலின், இங்கே பன்மைக்கா யது. இங்ஙனங் கூறவே, குறட்பாவின் சொற் சுருக்கமும் அதனுள் அடக்கப்பட்ட பொருள் விரிவும் நோக்கும் வழி, அக் கடுகும் ஏழ் கட னீரும் போலு மென்ற தாயிற்று, பொருள் விரிவி னளவு படாமை சொல்லிய படி, (௫௰௪)

ஔவையார்.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.

பொருள். குறள் நாயனாரது நூலின் ஆயிரத்து முந் நூற்று முப்பது குறள் வெண்பாக்களும், அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த—அணுவை அதன் நடுவே துளை செய்து எழு கடனீரையும் அத் துளையுட் பெய்து தன்னளவிற் குறுகும் வண்ணம் தறித்து வைத்தா லது போல்வனவாம்.

விரிவு. ‘மிக’ மிகச் சிற்றளவிற்கு எடுத்துச் சொல்லப்படுவ தொரு நுண் பொருளாகலின், அணு சொல்லப்பட்டது. முத்திய குறளின் விரிவுரையை நோக்குக, சொற் சுருக்கத்தின் அளவு படா

55