பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

58


திருவள்ளுவர் திருக்குறள்.

லாழ்ந்திருந்தன் முறைநிறுவன் மலைவு தீர்தல், பொழிவிழுமி யதுபயத்தல் காட்டாத லிப்பத்தும் பொலிய வாய்ந்த, கழி பொருளுங் கருதணியு நோக்குமிடந் தொறுங்கிடந்து களிப்புச் செய்ய;

பொருள். மொழி சுருங்கல்—சொற்கள் சுருங்கி நிற்றல், பொருள் விளங்கல்—பொருள்கள் (நன்கு) விளங்குதல், மொழிய இனிது ஆதல்— சொல்வதற்கு இன்பம் பயப்பதாதல், நல்ல மொழி புணர்த்தல்— நல்ல சொற்களை (த் தெரிந்தெடுத்து)ச் சேர்த்தல், வழி அமை ஓசையின் பொலிதல்—முன்னூல் வழியில் அமைந்த இசையோடு விளங்குதல், ஆழ்ந்து இருத்தல்—ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டிருத்தல், முறை நிறுவல்—முறைப்படி அமைத்தல், மலைவு தீர்தல்- முன்னூல் வழக்கோடு மாறுபடாமல் கூறல், பொழி விழுமியது பயத்தல்—மிகச் சிறந்த பொருளைத் தருதல், காட்டு ஆதல்—உதாரண மாதல், இ பத்தும் பொலிய வாய்ந்த—இப் பத்தும் அழகுபட நிறைந்த, கழி பொருளும் கருது அணியும்—பெரும் பொருளும் மதிக்கும் அலங்காரமும், நோக்கும் இடந்தொறும் கிடந்து களிப்பு செய்ய—பார்க்கும் இடம்தோறும் இருந்து உவகையை யுண்டாக்க;

அகலம். - நல்ல' செய்யுள் விகாரத்தால் னகர வொற்றுக் கெட்டும், 'இன்' உருபு ஒடு என்னும் பொருள் தந்தும் நின்றன. ‘கருது’ வினைத்தொகை. வெண்பா ஓசை யாவன, எந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல். இதுவும் குளகம்.

கருத்து. வள்ளுவரால் இயற்றப் பெற்ற குறள் வெண்பாக் களில் இச் செய்யுளிற் கூறிய பத்து அழகும் நிறைந்து விளங்குகின்றன. (௩)

மையேறு பொழின்மதுரை மாநகரத் தருட்புலமை மாட்சி

58