பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறப்புப் பாயிரம்.

யார்முன், கையேறு திருமூலா கலைச்சோதி மறைமுளைத்த கனிவாய் விண்டு, பையேறு மணிபொருமோர் துதிகவிசொற் றிடப்பலரும் பரவிப் போற்ற, வையேறு திருக்குறளென் றொருநூல்செய் துலகுவப்ப வளித்தா னாக;

பொருள். மை ஏறு பொழில் மதுரை மா நகரத்து—மேகங்கள் தங்கும் சோலைகள் சூழ்ந்த மதுரை என்னும் பெரிய நகரத்தின் கண், அருள் புலமை மாட்சியார் முன்—தெய்வ அருட் புலமையால் மாட்சிமைப்பட்டார் முன், கை ஏறு திரு மூல ஆகம சோதி—கையில் பொருந்திய அழகிய ஆதி ஆகமத்தை உடைய பரஞ் சோதியாகிய இறைவன், மறை முளைத்த கனிவாய் விண்டு—வேதங்கள் தோன்றிய இனிய வாயைத் திறந்து, பை ஏறு மணி பொரும் ஓர் துதி கவி சொற்றிட—(நாகத்தின்) படத்திலுள்ள நாக இரத்தினத்தை ஒத்த ஒரு துதி கவி சொல்ல, பலரும் பரவி போற்ற—பலரும் வணங்கி வாழ்த்த, ஐ ஏறு—அழகு பொருந்திய, திருக்குறள் என்று ஒரு நூல் செய்து உலகு உவப்ப அளித்தான்-திருக்குறள் என்று ஒரு நூல் இயற்றி உலகத்தார் உவக்கும்படியாகத் தந்தானாக;

அகலம். ஏறு என்பது வினைத்தொகை, ஆதி ஆகமத்தைக் கையில் கொண்டுள்ள கடவுள்—சிவபிரான், இதுவும் குளகம்.

கருத்து. திருவள்ளுவர் தமது திருக்குறளை மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினர்.(௪)

அன்ன நூற் பெருமையுணர்ந் தான்றபா ணிநிபுரிந்த வரிய நூலுக், கின்னறீர் பதஞ்சலிபோற் பலருரையும் வியாப்பியமா யிருக்க நாளும், முன்னவரம் வியாபகமே யாக நூற் கருத் துணர்ந்தே மொழித்தா ரென்ன, நன்னர்வான் புகழ்ப்பரிமே லழகருரை யியற்றவதை நாடி யாரும்;

59