பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

திருவள்ளுவர் திருக்குறள்.
அறப் பால்.

முன்னுரை.


எல்லாம் வல்ல இறைவன் அருளால் திருவள்ளுவ நாயனார் திருக்குறளுக்கு யான் இயற்றியுள்ள உரையில், அறப்பாலுரை மூலத்துடன் அச்சாகி முற்றுப் பெற்றது. அதனை அச்சிடத் தொடங்கிய காலையில் அறப்பால், பொருட்பால், இன்பப்பால், ஆகிய மூன்று பால்களின் உரைகளையும் மூலத்துடன் அச்சிட்டு, அவற்றை ஒரே புத்தகமாக வெளியிட வேண்டுமென்று நினைத்தேன். இப்போது, திருவள்ளுவ மாலைச் செய்யுள்களும், மகா வித்வான் மீனாச்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முதலிய நால்வர் செய்யுள்களும், அவற்றின் உரைகளும், அறப்பால் மூலமும் உரையும், முந்நூறு பக்கங்கள் ஆகின்றன. பொருட்பால் மூலத்திற்கும் உரைக்கும் முந்நூறு பக்கங்களுக்கு மேலாகு மென்றும், இன்பப்பால் மூலத்திற்கும் உரைக்கும், திருவள்ளுவரது காலம், சாதி, சமயம், திருக்குறளை இயற்றியதற் குரிய காரணம், அக் காலத்துத் தமிழ் நாட்டின் நிலைமை, திருக்குறளுக்கு ஆதாரமான நூல்கள் முதலியவற்றைப் பற்றிய எனது ஆராய்ச்சிக் குறிப்புகளுக்கும் சில ஏறக்குறைய முந்நூறு பக்கங்கள் ஆகுமென்றும் நினைக்கிறேன். அதுபற்றி, ஒவ்வொரு பாலையும் அதனதன் உரையையும் தனித்தனி ஒவ்வொரு புத்தகமாக வெளியிடத்