பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

60


திருவள்ளுவர் திருக்குறள்.

பொருள். அன்ன நூல் பெருமை உணர்ந்து—அத்தகைய நூலின் பெருமையை உணர்ந்து, ஆன்ற பாணிநி புரிந்த அரிய நூலுக்கு—கல்வி யறிவால் நிறைந்த பாணிநி முனிவர் இயற்றிய அரிய (பாணிநியம் என்னும்) வடமொழி நூலுக்கு, இன்னல் தீர் பதஞ்சலி போல்—இடர் தீர்க்கும் பதஞ்சலி முனிவர் உரைத்த உரையைப் போல், பலர் உரையும் வியாப்பியமாய் இருக்க—பலருடைய உரைகளும் நிறைந்தனவா யிருக்க, நாளும் முன் அவாவும் வியாபகமே ஆக—எந் நாளும் தலைமையை அவாவும் வியாபகமே யாக, நூல் கருத்து உணர்ந்தே மொழிந்தார் என்ன—நூலின் கருத்தை உணர்ந்தே உரைத்தார் என்று சொல்லும்படியாக, நன்னர் வான் புகழ் பரிமேலழகர் உரை இயற்ற—நல்ல உயர்ந்த புகழை யுடைய பரிமே லழகர் (ஓர் ) உரை செய்ய, அதை நாடி யாரும்—அதனை விரும்பி யாரும்;

அகலம். முன்—முதல்—தலைமை, அவாவும் என்பது செய்யுள் விகாரத்தான் வகர உகரம் கெட்டு நின்றது. வியாப்பியம்—வியாபித்தலை யுடையது. வியாபகம்—வியாபித்தல் தலைமை அவாவும் வியாபகம்— தலைமையை எய்துதற்கு வேண்டும் வியாபகத் தன்மை. இதுவும் குளகம்.

கருத்து. அத் திருக்குறளுக்குப் பரிமேலழகர் ஒரு சிறந்த உரை இயற்றினார். (௫)

ஏட்டுவரைந் தெடுத்துணர்ந்து வருநாளி லெங்கணுஞ்சா லெழுத்துக் குற்றம், ஓட்டும்வகை யுணாராராய்ப் பரம்பரை யொன் றேகருதி யொழிந்தா ரத்தோ, மாட்டுவலென் றுணர்ந்தனைய மூலமும்பே ருரையுமுனம் வகுத்த வாறே, திட்டுதலி லாவெழுத்தி லியைவியென வுலகுபுகழ் செம்பி நாடன்;

Go

60