பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

பொருள். ஏட்டு வரைந்து எடுத்து உணர்ந்துவரும் அ நாளில்— (ஓலை)ஏட்டில் எழுதி(ப்பலரும்) எடுத்துக் கற்றுவரும் அக்காலத்தில், எங்கணும் சால் எழுத்து குற்றம் ஓட்டும் வகை அறியாராய் பரம்பரை ஒன்றே கருதி ஒழிந்தார்—எவ்விடத்தும் நிறைந்த பிழைகளைப் போக்கும் வழியை அறியாராய்த் தொன்றுதொட்டு வரும் வழக்கம் ஒன்றையே கருதி (அப்பிழைகளைத் திருத்தாது) ஒழிந்தார்; அ தோம் ஆட்டுவல் என்று—அக்குற்றத்தை யான் போக்குவேன் என்று நினைத்து, அனைய மூலமும் பெரு உரையும்—அத்தகைய மூலத்தையும் பெரிய உரையையும், முன் வகுத்த ஆறே—முன்னர் எழுதி யிருந்தபடியே, தீட்டுதல் இல்லாத எழுத்தால் இயைவி னன்ன உலகு புகழ் செம்பி நாடன்—எழுதுதல் இல்லாத அச்செழுத்தில் பதித்திடுக என்று சொல்ல உலகம் (முழுவதும் புகழ்கின்ற செம்பி நாடன்;

அகலம். ஏட்டில் எழுதிப் படித்து வருங் காலத்தில் எங்கணும் எழுத்துக் குற்றங்கள்நிறைந்தன என்பது பெற்றாம், தொன்றுதொட்டு வரும் வழக்கம் —முன் னேடுகளிற் கண்ட பிழைகளோடே எழுதிப் படித்துவரும் வழக்கம். எழுத்தாணியைத் தீட்டி, அதனால் எழுத வேண்டாத அச்செழுத்தைத் தீட்டுதல் இலா எழுத்து என்றார். இயைவித்தல்—பொருத்துவித்தல்— பதிப்பித்தல், இச் செய்யுளும் குளகம்.

கருத்து. திருக்குறளை ஏட்டில் எழுதிப் படித்துவருங் காலத் தில் அதனுட் பல குற்றங்கள் புகுந்தன, அத்தகைய குற்றங்கள் மேலும் அதனுட் புகா திருக்குமாறு அதனை அச்சிடுக என்றனன் செம்பி நாடன்.(௬)

ஓதுபதி யாயவிரா மேசர்திரு வருளானீ ருடுத்த வைப்பிற், கோதுபதி யாதகல வறந்தழைந்து விளங்கிடச்செங் கோல்

61

61