பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


திருவள்ளுவர் திருக்குறள்.

கைக் கொண்ட, சேதுபதி மானேச ரதிகார நடாத்து செய சிங்கஞ் செம்பூ, மாதுபதி யயர்வுயிர்ப்ப வுலகமுழு வதும் புரக்கும் வள்ளற் கோமான்;

பொருள், ஓது பதி ஆய இராமேசர் திருவருளால்—(வேதங்களெல்லாம்) ஓதுகின்ற இறைவராகிய இராமேச்சுரருடைய திருவருளால், நீர் உடுத்த வைப்பில்—கடல் சூழ்ந்த உலகின் கண், கோது பதியாது அகல-குற்றம் தங்காமல் ஒழிய, அறம் தழைத்து விளங்கிட- தருமம் செழித்து விளங்க, செங்கோல் கை கொண்ட—செங்கோலைக் கையிற் கொண்ட, சேதுபதி மானேசர் அதிகாரம் நடாத்து செயசிங்கம்-இராமநாதபுரம் அரசரின் மானேஜர் அதிகாரத்தை நடாத்துகின்ற வெற்றிச் சிங்கம், செம்பூமாது பதி அயர்வு உயிர்ப்ப—செந்தாமரை மலரில் வாழும் இலக்குமியின் நாயகராகிய திருமால் வருத்தம் தீர, உலகம் முழுவதும் புரக்கும் வள்ளல் கோமான்—உலக மெல்லாம் காக்கும் வள்ளலாகிய அரசன்;

அகலம். இராமேசர்-இராமர் தொழுத சிவபிரான். செங்கோல் கைக்கொள்ளல்—அரசாட்சி புரிதல். ‘மானேஜர்’ ஆங்கிலச் சொல். மானேஜர்—நிர்வாகி, இதுவும் குளகம்.

கருத்து. அச் செம்பி நாடன் சேதுபதியின் மானேஜராய் அரசாட்சி நடாத்தினான். (௭)

கற்பகத்தின் றளிரனைய மென்னிறமுஞ் சங்கினொடு கமல ரேகை, உற்பவமு மொருசுரபிச் செருத்தன்முலை நிகர்விரலு மொளிர்பொன் னாழி, யிற்பதியொண் சுடர்மணியு மெய்துதலாற் றருநிதிய மிரண்டு தெய்வப், பொற்பமையா வருண் மணியில் வைத்துஞ்சேர்ந் தாயவெனும் புரவுக் கையான்;

பொருள். கற்பகத்தின் தளிர் அனைய மென் நிறமும்—கற்பக மரத்தின் தளிரை யொத்த மெல்லிய நிறமும், சங்கினோடு கமல . 62 |

(7)

62