பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறப்புப் பாயிரம்.


ரேகை உற்பவமும்—சங்க ரேகை கமல ரேகை (அகங் கையில்) உற் பத்தியும், ஒரு சுரபி செருத்தல் முலை நிகர் விரலும்—ஒப்பற்ற காம தேனுவின் (பால்) நிறைதலுள்ள முலையை ஒத்த விரலும், ஒளிர் பொன் ஆழியில் பதி ஒண் சுடர் மணியும் எய்துதலான்—ஒளி வீசுகின்ற தங்க மோதிரத்தில் பதித்த ஒள்ளிய சுடரையுடைய மணியும் பொருந்துதலால், தரு நிதியம் இரண்டு பொற்பு அமை ஆ அருள் மணி— கற்பகமும் சங்க நிதி பதும நிதி யாகிய இரண்டும் தெய்வ அழகு அமைந்த காமதேனுவும் (வேண்டிய எல்லாம்) அளிக்கும் சித்தா மணியும், இ ஐந்தும் சேர்ந்து ஆய எனும் புரவு கையான்—இவ் வைந்தும் சேர்ந்து உண்டாயவை என்னும் கொடைக் கைகளை யுடையவன்.

அகலம். நிகர், ஒளிர், பதி, அமை, அருள் என்பன வினைத் தொகைகள். இதுவும் குளகம்.

கருத்து. அக் கோமான் கற்பகம், சங்க நிதி, பதும நிதி, காமதேனு, சிந்தாமணி என்னும் ஐந்தும் சேர்ந்து ஆகியவை என்னும் கொடைக் கைகளை யுடையான். (௮)

பாருநெடு விசும்புமறு - வெங்குளதென் றாராயப் பரந்த மார்பான், ஓருமுணர் வுடையார்பாற் பெருங்கருணை மடை திறந்தா லொத்த கண்ணான், வாருமிள நகையரும்ப வினியர் முக மலர்த்துமொழி மதுர வாயான், மேருவெனப் புடை பரந்து பகைவர்நிலை கலங்கவெழுஉ வீங்குந் தோளான்;

பொருள். பாரும் நெடு விசும்பும் மறு எங்கு உளது என்று ஆராய பரந்தமார்பான்—பூமியிலுள்ள மாந்தர்களும் அகன்ற வானிலுள்ள தேவர்களும் (ஸ்ரீவத்ஸம் என்னும்) மச்சம் எவ்விடத்தில் உள்ளது என்று தேடும்படியாக விரிந்த மார்பை யுடையவன், ஓரும்

63