பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

68



திருவள்ளுவர் திருக்குறள்.

பொருள். தரை செய் தவ பயன் ஆகி அமைந்த பெரு வள புதுவை தலைமையோன்—நிலமகள் செய்த தவத்தின் பயனாகி அமைந்துள்ள பெரிய வளத்தையுடைய புதுவை நகரின் தலைவன், பொன் வரை செய் நிதி பெரு வாழ்க்கை மா கனவான்—தங்கத்தை மலையாக ஈட்டிய செல்வத்தையும் பெரிய வாழ்க்கையையு முடைய பெரிய கனவான், பெரும் புலவர் மறவாது என்றும் உரை செய்—பெரிய புலவர்கள் மறவாமல் எந் நாளும் துதி செய்கின்ற, புகழ் பொன்னுச்சாமி நர இந்திரன் மகிழ் கூர்ந்து உரைப்ப கேட்டு—புகழையுடைய பொன்னுச்சாமி என்னும் பெயரையுடைய மக்கட் கரசன் மகிழ்ச்சி மிக்குச் சொல்லக் கேட்டு, நரை செய் ஏறு விடை உயர்த்த நம்பிரான் அடிக்கு அன்பே நயக்கும் நல்லோன்—வெண்மை திகழ்கின்ற ஆண் இடபக் கொடியை உயர்த்திய நம் இறைவன் அடிகளுக்கே அன்பு செலுத்தும் நல்லவன்;

அகலம். இதுவும் குளகம், ‘செய்’ நான்கும் வினைத்தொகைகள், இந்திரன் தேவர்க்கு அரசன் ஆயினாற்போல, இவன் மக்கட்கு அரசன் ஆயினன், ‘அன்பே’ என்பதன் ஏகாரத்தைப் பிரித்து, ‘அடிக்கு’ என்பதனுடன் சேர்த்துப் பொருள் உரைக்கப்பட்டது. கனவான்—மதிப்பை யுடையவன்.

கருத்து. புதுவை நகரின் அரசன், பெரிய செல்வவான், பெரிய மதிப்பை யுடையவன், பெரிய புகழை யுடையவன், பொன்னுச்சாமி என்னும் பெயரை யுடையவன் பின் வருகிற படி சொன்னான். (௰௨)

மன்னுபெருந் தமிழ்ப்பாடை யிலக்கணமு மிலக்கியமும் வரம்பு கண்டோன், பன்னுசிவ புராணங்கள் பலதெரிந்தோன் சிவாகம நூற் பரவை மூழ்கி, உன்னுமனு பூதியெனும் விலைவரம்பி லாமணிகை யுறக்கொண் டுள்ளான், இன்னுநய

68