பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மரகதம் பழுத்த குரகத மோரேழ், சேர்தர யாத்த வோர் கால் வையத், தமர்ந்தினி தெழூஉ வகலிடம் புதைத்த, செறியிருள் விழுங்குஞ் செஞ்சுடர் வானவ, னலங்கொளி விரிக்கு நலங்கிளர் கரங்க, டீண்டிடத் திறக்கு மாண்டகுபுதவ, மாயிரந் தாங்கி யவிர்நிலா வெறிக்குந், தரளங் குயிற்றிய தானியக் கோயி, லரசுவீற் றிருந்தின் வகில மீன்ற, நான் மறை முழங்குநன் னாவுடைக் கடவுள், பெருகுபே ரருளாற் றிருவள் ளுவராய், மகிதலத் துதித்து மன்னுறு மக்க, ளறமுத நான்குந் திறமுற வுணரவு, நன்மை யெங்கணு நனிசிறந் தோங்கவும், புன்மை யண்டப் புறம்பே யொழியவுஞ், சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவ, னுள்ளம் பெருங்களி கொள்ளை கொள்ளவுந், தவலரும் புகழ்சால் சங்கத் தமர்ந்த, நுவலரும் புலவர்சொ னுண்பொரு ணூலெலாந், திருப்பெறு கல்வி நிரப்புறு வோர்சொல், பருப்பொரு ணூலாய் விருப்பற் றொழியவுஞ், சிற்றள வினதாய்ப் பெரும் பொரு ளடக்கி, யுற்றவிந் நூலினி துணர்வோர் யாரு, நணுகுசொற் சுவை யொடு நகுபொருட் சுவைகவர்ந், தணுவின்மா மேரு வடக்கந் துணியவு, நற்றமிழ்ச் செல்வம் பெற்றநந் நாட்டின் முன், மற்றைய பன்மொழி யுற்றபுன் னாடெலா, மன்பொரு ளுடையார்முன் வறியவர் போல, வென்செய் வாமென் றேக்கற்று நிற்கவு, மெழுத்து முதலாய விலக்கண மெல்லாம், பழுத்தினி துறங்கும் பன்னி யாகவு, மின்றி யமையா வின்னலம் பலவுந், துன்றின் கிடந்து நுதிபெறத் திகழவுந், திருவுளத் துன்னித் திருவாய் மலர்ந்து, பொருவறப் புகன்ற புகலருந் தெய்வத், திருக்குற ளென்னுஞ் செந்தமிழ் வேதம், பலருரை செய்ய நிலவிய தெனினு, மொருவாப் புலமைத் தருமர்முன் னாய,