பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


  திருவள்ளுவர் திருக்குறள்.

கொள்ளும் செய்விய ஒளியையுடைய சூரியனது, அலங்கொளி. 1 திறக்கும் - விளக்குகின்ற ஒளியைப் பரப்பும் நன்மை தருகின்ற கிரணங்கள் தொடவே திறக்கும், மாண்டகு...கடவுள் --மாட்சிமைப் பட்ட தகுதியான கதவுகள் ஆயிரம் கொண்டு விரிந்த ஒளியை வீசம் முத்துக்கள் பதித்த பொன்னாற் செய்த கோவிவின் கண் அரசனாய்ச் சிறந் தமர்ந்து இவ் வுலகினைச் சிருட்டித்த, நான்கு வேதங்களையும் ஓதும் நான்கு முகங்களையுடைய பிரம தேவனுடைய, பெருகு... . உதித்த-(நாள் தோறும்) வளரும் பெரிய அருளால் திருவள்ளுவ ராய்ப் புவியின்கண்னே தோன்றி, மன்னுறு... உணரவும் --நிலை பெறும் மக்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும் திறம்பட அறியவும், நன்மை ... ஓங்கவும்- நன்மை யானது எவ்விடத்தும் மிகச் சிறந்து வளரவும், நன்மை ,..ஒழியவும் - தீமையானது ஆகாயத்துக்கு அப்பாற் போய்த் தொலையவும், சந்தன... கொள்ளவும் - சந்தன மரங்கள் அடர்ந்த பொதிய மலையில் வாழும் செந்தமிழ் ஆசிரியனான அகத்திய முனிவனது உள்ளம் பெருங் களிப்பைக் கொள்ளையாகக் கொள்ளவும், தவலறாம்...ஒழிய வும்- கெடுதற்கு அரிய புகழ் நிறைந்த தமிழ்ச் சங்கத்தில் வீற்றிருந்த புகழ்தற்கு அரிய புலவர்கள் சொல்லிய நுட்பமான பொருள்கள் அடங்கிய நூல்க ளெல்லாம் அழகு பொருந்திய கல்விப் பொருள் இல்லாதார் சொல்லும் பருப் பொருள் நூல்களாய் விருப்பமற்று ஒழி யவும், சிற்றளவி னதாய், துணியவும்-சிறிய உருவை உடையதாய்ப் பெரிய பொருள்களை அடக்கி நிற்கின்ற இந் நூலினை இனிது கற்று ணர்வோர் யாரும், பொருந்திய - சொற் சுவையுடன் விளங்கிய பொருட் சுவையையும் கொண்டு, அணுவின் மகாமேரு மலையை அடக்கத் துணியவும், நற் றமிழ்...நிற்கவும்- நல்ல தமிழ்ச் செல்வத் தைப் பெற்ற நமது நாட்டின் முன் மற்றைய, பல மொழிகள் பொருத்திய புல்லிய நாடுக ளெல்லாம் நிலையான செல்வ முடையவர்

16.

76