பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

78


திருவள்ளுவர் திருக்குறள்

புகுந்து...நன்னா இடையான்-தாவிப் புகுந்து கருங் குரங்குக் குட்டிளெல்லாம் (அம் மரங்களை) அடைந்து, அம் மரங்கள் மேல் இருந்து தாவிச் சென்று அம் மரங்களின் நுனிகளில் ஏறி, ஒழிதல் இல்லாத அப் பழங்களைப் பறித்து உண்ண வலிமை யின்றிக், கூன் கொண்ட முதுகின்மே லுள்ள மயிரெல்லாம் உதிர்ந்து, இரு கண்களும் குழிகளாகி, எலும்புக ளெல்லாம் வெளித் தோன்றி, வயிறுகள் மிக ஒட்டி, மிகு பசி வருத்த வாய் திறந்து பார்த்துக் கொண்டு செருங்கி யிருக்கும் வயது முதிர்ந்த பெரிய கருங் குரங்குகள் முன்பு (அப் பழங்களை) முதலில் உகுத்து, வெறுக்கும்படியாக ஊட்டி, பின் விரும்பித் தாம் உண்டு, தாமாக முயன்று உண்ணத் தக்க வலியில்லாத உறவினர்களுக்கு ஊட்டிப் (பின்) உண்ணும் இல்வாழ்வாரை ஒக்கும் நலம் நிறைந்த செம்பி நாடு என்னும் நல்ல நாட்டை உடையவன், மேருவொன் றென்று... மாநகரானி- மேரு மலை யென்று ஒன்று உண்டெனச் சொல்லுதல் பொய் யென்று எவரும் சொல்லும்படியாக அளவு கடந்து உயர்ந்து நல்ல பொன்னால் கட்டப்பட்ட, பலவகை உயர்ந்த மணிகள் பதிக்கப் பெற்ற மாடங்களின்மேல் உலாவும் ஒளி யுடைய ஆபரணங்களை அணிந்த பெண்கள் அன்பு நிறைந்த ஆடவர்கள் நெருங்கிவரப் பார்த்து, இன்ப முறக் கூட எண்ணும் தமது காதலானது குறிப்பால் வெளிப்பட 'நல்ல பழமாகிய இதளைச் சிவந்த வாயையும் பச்சைச் சிறகுகளையு முடைய இளங் கிளிக்கு ஊட்ட உள்ளே போகிறேன்' என்று சொல்லிப் பூரணச் சந்திரனது ஒளி குறையும்படியாகக், கண்ணாடிகளை வெட்டி (அவற்றால்) கட்டி ஒளிரும் அரங்குட் புகுந்து, சுவரிடத்து உருவால் ஒத்துத் தோன்றும் பிரதி பிம்பக் கிளிக் கூட்டின் நேரே சென்று (அதனைத்) திறத்தலை, பின்னே சென்ற காதலர் அன்போடு பார்க்க, மிக்க நாணத்தோடு சிரித்து ஓடித் தழுவுகின்ற வளம் நிறைந்த புதுவை என்னும் பெரிய நகரை ஆள்கின்றவன், அவமெலாம்...தேவர்- பயனற்ற ஆபரணங்க

78