பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


       சிறப்புப் பாயிரம்.

விரிந்து செல்கின்ற கங்கை நதியின் பெரிய நீரை யெல்லாம் சுருக் கிச் சிறிய துளியாக்கி, ஒளி பொருந்திய சடை முடியில் ஒளிரும் படி வைக்கும் அந்தமற்ற முதற் கடவுளாகிய சிவ பெருமான் இடை விடாது தங்கும், கெடாத பெரிய தவத்தைப் பொருந்தி விளங்கி அழகு'நிறைந்த, (தன்னைத்) தரிசித்தவர்களது கொடிய பிறப்பானது காணாமற் போக அருள் புரிகின்ற திருக்கோணாசலமும், விளங்கு கின்ற நலங்களை உயிர்கள் அடையும்படியாக மும் மலத்தின் வலிமையைக் கொல்லும் பெரிய திருக்கேதீச்சரமும் இரண்டு நிதி களாகப் பொருந்தப் பெற்று நிலவுறும் நல்ல ஈழ நாடு என்னும் ஒப்பில்லாத குபேரனுக்கு ஒப்பற்ற தலையாய மாட்சிமை தங்கிய சோலைகள் நிறைந்த யாழ்ப்பாணம்; அத் தலைக்கு அழகுறச் சூடும் மணிகள் பதித்த கரீடத்தை ஒக்கும் பல நூல்களையும் கற்றுணர்ந்த நல்ல நாவலர்கள் நாள்தோறும் கூடி ஆராய்தல் பொருந்திய பெருமை உயர்ந்து வளரும் பெரிய வளமெல்லாம் சேர்ந்த, தன் பெய சாகிய தொகைநிலைத் தொடரைச் சொல்லின் விலை பெற்று நிற்கும்(அம்) முற் சொல்லால் விளங்குகின்ற பொருள்களை உண்டாக்கி, இன்னமும் பற்பலர் உரைக்க இடம் கொடுக்கின்ற, மேகங்கள் தவழ்கின்ற மதில்கள் சூழ்ந்த நல்லூர் என்பர்; விளங்கும் அக் கீரிடத்திற்கு ஓப்பற்ற சிரோசத்தினம் என் (முன்) சொல்லாத உலகம் சொல்லும் படியாக வந்து தோன்றினான், செந்தமிழ்... பிழம்பு-செந்தமிழ் என்னும் அழகிய கங்கையின் கழுத்திற்கு அழகாம் களிப்பினை எல்கும் மங்கல நாண் போன்றவன், இலக்கணங்களை யெல்லாம் நன்றாக விளங்கும் ஒளி மிகுந்த தூண்டா விளக்குப் போன்றவன், அடையக்கூடிய இன்பங்களை யெல்லாம் பொருந்திய புராணங்களை கற்பவர் யாவர்க்கும் ஒளிதரும் கண் போன்றவன், மெய் யறிவைச் கொடுத்துத் தொன்று தொட்டு வருகின்ற பிறப்பை ஒழிக்கும் பல நூல்களுக்கும் பொருத்தும் ஓர் இல்லம் போன்றவன், பொய்

11.

81