பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


திருவள்ளுவர் திருக்குறள். களைக் கண்டு நீக்கி மெய் இதுவே யென்னும் சைவ சித்தாந் தத் தெய்வக் கருவூலம் போன்றவன், என்னும் அறங்கட்கு நெருங்கிய உயிராகிய குளிர்ந்த பெரிய சிவ புண்ணியச் சுடர் போன்றவன், சிவனடியவரை... நாவலன் -- சிறுபிரானது அடியாரைச் சிவம் எனத் கருதும் தவமே பார்க்கும் பயனார் சீலன், என் உள்ளத்தில்கண் (நிலையாக க்) குடிகொண்டிருக்கின்ற, எண்ணும் சிறப்பெல்லாம் உடைய ஆறுமுகநாவலன்,

அகிலம். வளர், செழு, அசல், செறி, அலங்கு, கிளர், அவிர், பெருரு, சால், பெறு, சொல், சணுரு, நகு, விரி, சூழ், தழை, திகழ், அடு, தரு, உண், எண்ணு , விளக்கு, படர், மலி, தெறு, தழைதரு. ளற்று, உணர், நிலவு, இலகு, உறு, புனை, புகல், அறு, அமர், வயங்கு, கண்ணு, மூன்னு என்பன வினைத்தொகைகள், 'எழூஉ' செய்யூ என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம். 'மேலா' செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம். இன்றியமையாத, ஒருவாத, மாறாத, குழியாகி, காட்டாது, மூவாத, தாவாத, தூண்டாத என்பன ஈறு கெட்டு நின்றன. உதகம்-- நீர். குரகதம்-குதிரை. வையம்--தேர். புதவம் - கதவு. தமனியம் -- தங்கம், மகிதலம் -- உலகம். ஒருவாத-- நீங்காத. ககனம்--ஆகாயம், அம்பர்--அங்கு, நிவந்த--உயர்ந்த, கவின்-அழகு. வாவி- தாலி, வெரிந்-முதுகு . செம்பி நாடு -- முன் இராம நாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்ததா யிருந்த ஒரு நாடு பித்திகை-சுவர், பஞ்சரம்-கூடு. புதுவை-செம்பி நாட்டின் தலைநகர், கண்மை -கண்ணோட்டம். வசுந்தரை- பூமி, பொதுள்-நெருங்கு. தென் கடல் --தென் மதுரை, சலசம்--தாமரை. வரன்--சிவன், இடந்து-- தோண்டி, சுரபி--காமதேனு. பாகீரதி-- கங்கை நதி. அம் நதியைப் பகீரதன் கொண்டுவந்தமையால், அது பாகீரதி யென்று பெயர் பெற்றது. திருக்கோணாசலம்.-- இலங்கையிலுள்ள

82