பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்.

பொற்பமா தருக்களுட் கற்பக மென்னப், பலருரை யுள்ளு நிலவுற விளங்கும், பரிமே லழகர் புரியுரை யோடு, நயக்குறு மச்சில் வயங்கித் தருகென, வானினங் களினுயர் தேனு வென்ன, முற்றுற வாய்ந்து கற்றவர் குழுமிக், கற்பம் புகலினு மற்பமுங் குறையாப், பெருவள னமைந்து மருவுமிப் புவியிற், பம்புபன் னாட்டுயர் செம்பிநன் னாட, மணிகளுட் சிந்தா மணியெனப், பொன்னியல் புரிசை தென்னுற வுடுத்து, நன்னகர் பலவினுட் டுன்னுசீர் பெற்று, முதுபுகழ் சுமந்துயர் புதுவைமா நகரான், சலஞ்சலத் துதித்த நலம்புரி முத்தெனத், தவஞாலம் புகழுஞ் சிவஞானத் தேவர், பிறக்குமா தவத்திற் சிறக்கவந் துதித்தோன், பெருநிதி களினுய ரிருநிதி யென்ன, விரவலர்க் கெல்லாம் வரையாது கொடுக்கும், வள்ளற் குழாங்க ளுள்ளுயர் வள்ளல், பன்னக் கேட்க வுன்னத் தெவிட்டாச், செந்தமிழ்ச் சுவை தெரி சுந்தரக் குரிசில், கற்றார்க் கெல்லா நற்றா யில்லந், தூய்மை மிகுக்கும் வாய்மைப் பௌவந், தெருட்குரித் தாய வருட்பெருங் குன்ற, முத்தி தருஞ்சிவ பத்திப் பிண்ட, நன்னலம் பலவுந் துன்னுறு முறையுள், பெரும்புயா சலத்திற் சுரும்பமர்ந் துண்ணுந், தாமமார் பொன்னுச் சாமி மகிபன், கழித்தபே ருவகையின் மொழிந்தன னாகக், களங்கமற வாய்ந்து விளங்குறப் பதித்தன, னம்பரத் திலங்கு, செம்பொன் னாட்டைத், தோழ னெனக்கொளு மீழநன் னாட்டி, னேணமர்ந் தொளிர்யாழ்ப் பாணத் துற்ற, வளமலி செல்வ வளகை நிகர்க்கும், வில்லூர் மாட நல்லூர் வாண, னெழுத்து முதலாக வழுத்திலக் கணமெலாங், கடைபோக வுணர்ந்த

84