பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

- சிறப்புப் பாயிரம். . ' கடையறு மறிஞன், றராதலம் புகழ்சிவ, புராணச் செல்வஞ், சமையங் களிலுயர்ந் தகைவுபெற் றோங்கி,தெய்வத் திறம் பொலி சைவ மென்னப், பலபல கலையெலா நிலவுற வுணர்ந்த, புலவி அயர்ந்தொளிர் நலவி பெருமான், புகலருஞ் சீர்த்தி பொத்தஞ், சகமகி ழாறு முகநா வலனே,

பொருள். திருவார்...தேவன் - இலக்குமி தங்கும் மார்பை யுடைய, உருவம் வளர்கின்ற திருமாலின் கொப்பூழாகிய அழகிய தாமரை மலரிடத்தில் தங்கி, புரியினது முறுக்கு உடைந்து தேனைச் சொரிய, வளமுள்ள இதழ்களை விரிக்கும் வெண்டாமரை மலராகிய அழகிய இல்லத்தை விரும்பும், ஒப்பற்ற மனையாளை நிலையாக எந்நாளும் என்னை யுற்ற நாவில் சிவந்த நிறம் மாறி வெள்ளை நிறம் உண்டாக, சேர்வுற வைத்த ஒப்பற்ற பெரிய பிரம தேவன், அருமறை,..கரத்து-அரிய வேதங்களின் பொருள்களைப் பெரிய புவியின்கண் தோன்றிய மக்களுக் கெல்லாம் இன்பமுற உணர்த்து வதற்காக மனத்தில் நினைத்த (த்தான்) கொண்டுள்ள தெய்வ உருவத்தை ஒளித்து, திருவள்ளுவராய்... மெய்மலி-நூலை திருவள்ளுவராய்ப் பெரிய வுலகின்கண் வந்து, தேவலோகத்தவரும் விரும்பும் படியாக, என்றும் கெடாத கலங்களை அமைத்து, பல மலைகளுள்ளும் மேருமலையென்று சொல்லும்படியாக, பல நூல்களிலும் உயர்ந்த நல்ல நூலாக, விருப்பமுற அருளிய விரியுந் தன்மையுள்ள பொருள் கள் சேர்த்த தெய்வத்தன்மையுடைய திருக்குறளாகிய உண்மை நிறை ந்த நூலை, பொற்பமர்... புரியுரையோடு-அழகு பொருந்திய மரங்களுள் கற்பகமர மென்று சொல்லும்படியாக, பலருடைய உரைகளுள்ளும் ஒளி பெற்று விளங்கும் பரிமேலழகர் இயற்றிய உரையுடன், கயக்குறும்... தருதென-விருப்புறும் அச்சில் பதித்துத் தருக என்று சொல்ல, ஆனினங்களின் ... செம்மிகண்ணூடன்-பசுக் கூட்டங்ளில்.

85