பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

சிறப்புப் பாயிரம். அம்பரத் திலக்கும்... வாணன்-ஆகாயத்தின்கண் விளங்கும் செவ்விய தேவ ருலகத்தைத் தோழன் என்று கொள்ளத் தக்க (இன்ப மெல்லாம் உடைய) ஈழ நாடு என்னும் நல்ல நாட்டின், பெருமை பொருந்தி விளக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வளமெல்லாம் நிறைந்த செல்வ அளகை ஒக்கும் மேகம் தவழ்கின்ற மாடங்களை யுடைய நல்லூரில் வாழ்கின்றவன், எழுத்து...அறிஞன்- எழுத்து முதலாகச் சொல்லுகின்ற இலக்கணங்க ளெல்லாம் முற்றுறக் கற்ற குற்றமற்ற அறிஞன், தராதலம்... செல்வம்- உலகம் புகழும் சிவ புராணங்களாகிய செல்வம் (உடையவன்), சமயங்களின்,.. பெருமான் -- சமயங்களிலெல்லாம் உயர்ந்து நிறைவு பெற்று விளங்கித் தெய்வத் தன்மை பொருந்திய சைவ சமயம் போலப் பல பல சமயங்களெல்லாம் ஒளி பெற அறிந்த புலவர்களில் உயர்ந்து விளங்கும் நலங்கள் நிறைந்த பெருமான், புகலரும்...நானுலன் சொல்லுதற்கு அரிய கீர்த்தி வாய்ந்த, உலகத்தை யெல்லாம் (தமது கல்வியால்) மகிழ்விக்கும் ஆறுமுக நாவலன். அகலம். இப்பா வியற்றியவர் மகா வித்வான் மீனாச்சி சுந்தரம் பிள்ளை மாணக்கர்; சங்கரலிங்கப் பிள்ளை குமாரர், வளர், உறு, உயர், மலி, பம்பு, அமர், புரி, இயல், துன்னு , தெரி, ஊர், புகழ், பொலி, ஒளிர், ஆர், மகிழ் என்பன வினைத்தொகைகள். 'எகாரம்' ஈற்றசை. தவாத, குறையாத, நஞ்தாத, தெவிட்டாத, என்பன செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு நின்றன. மருமம்--மார்பு. உந்தி--கொப்பூழ், அந்தில்--அவ்விடம், புரி--திரி; வைக் கோல் புரி, கயிற்றுப் புரி என வருதல் காண்க. முருரு--தேன். பயத்தல் -- உண்டாதல், நயக்கு-விருப்பு, வயக்கி-- வசப்படுத்தி.புதுப்பித்து 'ஆன்-பசு. தேனு- காமதேனு என்னும் தேவர் நாட்டுப் பசு. கற்பம்--ஆயிரங் கோடி. குறையாத-மேல்மேல்

87

87