பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

திருவள்ளுவர் திருக்குறள். வளர்ந்து கொண்டிருக்கிற, புரிசை-மதில், தென்--அழகு. சலஞ்சலம் -- வலம்புரி யாயிரம் சூழ்ந்த சங்கு தெவிட்டாத --தேக்கிடாத --வெறுக்காத, குரிசில் --அரசன், பெளவம்-கடல், பிண்டம்--உடல், உறையுள் --உயிர் தங்கும் உடல்; இல்லம், புயம்+அசலம் =புயாசலம் =மார்பாகிய மலை. மகிபன் -- அரசன். அம்பரம்--ஆகாயம், பொன்னாடு-- தேவ ருலகம், எண்- பெருமை,அளகை--குபேரன் பட்டணம், தராதலம்--பூமி, சீர்த்தி--மிகு புகழ். பொத்தும்- போர்க்கும். பம்புதல்-பரவதல், சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார். (நேரிசை யாசிரியப்பா.) மலர் தலை யுலகிற் குலவுயிர்த் தொகைக, டுன்னிய வினைவழி மன்னிய போகந், தனைவிழைந் தருந்த கனைமலர்க் கோதை, மலைமக ளொருபா னிலைதர வைத்த, சிவபிரா னருளின் றவலரு வலியாற், பாற்படு மண்டப் பரப்பினை நொடியினுள், வீற்று வீற்றாக விழுத்தக வகுத்த, தேன்முகப் பதும நான் முகப் புத்தேன், வன்பட ரகன்று மன்பதை யனைத்தும், விதிவிலக் குணர்ந்து கதிபெறற் குவந்து, சீரிய தெய்வ வாரிய பொழியா, னல்கிய வளமை மல்கிய சிறப்பிற், பாயிர நான்மறை மாயிரு ஞாலத், தடுபகை காக்கப் படுபொரு ளாதலி, னுலையா மரபி னிலை பெற வம்மறைப், பருப்பொரு ளொருவி விழுப்பொரு ளொருங்கு, மமிழ்தினு மினிய தமிழினிற் றரு வான், பவர்சடைப் பனவர் நுவலருஞ் சீர்சா, லிகலறு தவத் திறற் பகவமா முனிவரன், செய்தவப் பயனான் மைதப வந்து, மாண்டநல் லருட்கொடை பூண்டகா ரணத்தாற், றெய்வப் புலமைத் திருவள் ளுவரெனு, நிகரில்பேர் மேற்கொண் டக

88

88