பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் உ-ம். மீக்கோள், மீப்பல் எனவரும். 'உடனிலை' என்றதனால், மீங்குழி, மீந்தோல் என மெல்லெழுத்துப்பெற்று முடிவனவும் கொள்க. உருஉ வேற்றுமைக்கண்ணு மதனோரற்றே. (சக) இஃது, அவ்வீற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- வேற்றுமைக்கண்ணும் அதன் ஒர் அற்று -ஈகாரவீற்றுப்பெயர் வேற்று மைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் ஆகாரவீற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்துப்பெற்று முடியும். உ-ம். ஈக்கால், சிறகு, தலை, புறம் எனவரும். டக்ெெருைபேய குருபிய னிளையும் இமையின் வல்லெழுத் தியற்கை பாகும். (ருய) இஃது, அவ்வீற்று வேற்றுமை முடிபினுள் ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- நீ என் ஒருபெயர் உருபுஇயல் நிலையும்-நீ என நின்ற ஒருபெயர் உருபு புணர்ச்சிக்கண் நெடுமுதல் குறுகி னகரவொற்றுப்பெற்று முடிந்த இயல்பின்கண்ணே நின்று முடியும்; அ வயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் - அவ்வாறு முடிந்தவிடத்து இயைபுவல்லெழுத்து மிகாது. உ-ம். நின்கை; செவி, தலை, புறம் எனவரும். உருசு. உகர விறுதி யகர வியற்றே. இஃது, உகரவீற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (ருக) இ-ள் :- உகா இறுதி அகர இயற்று - உகரவீற்றுப்பெயர் அல்வழிக்கண் அகர வீற்று அவ்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். கடுக்குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும். உருரு. சுட்டின் முன்னரு மத்தொழிற் றாகும். இஃது, இவ்வீற்றுச்சுட்டு வன்கணத்தொடு கூடிமுடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள்:சுட்டின் முன்னரும் அ தொழிற்று ஆகும்-உகரவீற்றுச் சுட்டின்முன் னரும் வல்லெழுத்து வரும்வழி அவ்வகரவீற்று அவ்வழியின் தொழிற்றாய் வல்லெழு த்து மிக்குமுடியும். உ-ம். உக்கொற்றன்; சாத்தன், தேவன், பூதன் எனவரும். உருக. ஏனவை வரினே மேனிலை பியல்பே. (ருகூ) இஃது, அவ்வீற்றுச்சுட்டு ஒழிந்த கணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள்-ஏனவை வரின் மேல் நிலை இயல்பு-உகா வீற்றுச் சுட்டின்முன் ஒழிந்த கணம் வருமொழியாக வரின் மேல் அகரவீற்றுச்சுட்டு முடிந்துநின்ற நிலைமையின் இயல்பையுடையவாய் முடியும். உ-ம். உஞ்ஞாண், உந்தூல், உம்மணி எனவும்; உவ்யாழ், உவ்வட்டு எனவும்; உறுவடை, உவ்வாடை, உவ்வெளவியம் எனவும்; ஊவயினான எனவும் வரும். (BP)