பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எட்டாவது - புள்ளிமயங்கியல். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், புள்ளியீறு வன்கணத்தோடும் சிறு பான்மை பிறாணத்தோடும் மயங்கிப்புணரும்இயல்பு உணர்த்தினமையின் புள்ளிமயங் கியல் என்னும் பெயர்த்து. உகஎ. ஞாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர் அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே உகரம் வருத ஸசவயி னான். இத்தலைச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின், ஞகாரவீறு வன்கணத்தோடு இரு இருவழிக்கண்ணும் புணருமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்-ஞகாரம் ஈற்றின்கண் ஒற் ருககின்ற தொழிற்பெயரின்முன்னர், அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்- அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைக்கண்ணும், வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகும் - வல்லெழுத்துமுதல்மொழி வருமொழியாய் இயையின் வல் லெழுத்துவருமொழிக்கண் மிக்குமுடியும். அ வயின் உகரம் வருதல்-ஆண்டு நிலைமொ ழிக்கண் உகரம் வருக. உ-ம். உரிஞுக்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்: உரிஞூக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். உகூஅ. ஞமேவ வியையினு முகரநிலையும். (8) இஃது, அவ்வீறு மென்கணத்தோடும் இடைக்கணத்துவகரத்தோடும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள் :- ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும் - அந்த ஞகாரவீறு வன்கண மன்றி ஞ சுமவ முதன்மொழி வருமொழியாய் இலையினும் நிலைமொழிக்கண் உகரம் நிலை பெற்று முடியும். உ-ம். உரிஞுஞான்றது; நீண்டது, மாண்டது எனவும்: உரிஞுஞாற்சி; ரீட்சி, மாட்சி எனவும்: உரிஞுவலிது; வலிமை எனவும் வரும். இடைக்கணத்து யகரத்தோடும் உயிரோடும் புணருமாறு தொகைமாபினுள் "உகர மொடு புணரும் புள்ளி யிறுதி" (ருந்-திக] என்பதனுட் கூறப்பட்டது. (2) நகர விறுதியு மதனோ ரற்றே. இது, நகாவீது மேற்கூறிய கணங்களோடு ஒருவழிமுடியுமாறு கூறுதல் முதலிற்று. இ-ள் :- நகர இறுதியும் அதன் ஓர் அற்று - நகரவீற்றுப்பெயரும் மேற்கூறிய கணங்களொடு புணரும் வழி அஞ்ஞகாரவீற்றோடு ஓர் இயல்பிற்றாய் முடியும்.