பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் ATCT 'செல்வழியறிதல்' என்றதனால், குளங்கரை, குளக்கரை என்றதுபோல, அல்லன ஒத்த உறழ்ச்சியல்ல வென்பதுகொள்க. 'வழக்கத்தான' என்றதனான், இவ்வீற்று வேற்றுமைக்கண் முடியாதனவெல்லாம் முடித்துக்கொள்க. இலவங்கோடு எனவும், புலம்புக்கன்னே எனவும், நிலத்துக்கடந்தான் எனவும் வரும்- இல்ல மரப்பெயர் விசைமர வியற்றே. (கஎ) இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்துவிலக்கி மெல்லெழுத்து விதித்தல் நுதலிற்று, இ-ள்:- இல்லம் மரப் பெயர் விசை மர இயற்று - இல்லம் என்னும் மரத்தினை உணரநின்றபெயர் விசையென்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். இல்லங்கோடு; செதிள், தோல், பூ எனவரும். இதன்கண் மகரக்கேடு முன்னர் "எல்லாம்" (சூத்திரம் - ககூ) என்பதனாற் கொள்க. அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகும். இஃது, அவ்வீற்று அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (யஅ) இ-ள்:- அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும்-மகரவீறு அல்வழிக்கணெல் லாம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும். உ-ம். மரங்குறிது; சிறிது, தீது, பெரிது எனவரும். 'எல்லாம்' என்றதனான், இவ்வீற்று அல்வழிமுடிபில் முடியாதனவெல்லாம் கொள்க. மரஞான்றது; நீண்டது, மாண்டது எனவும்: வட்டத்தழை, வட்டப் பலகை எனவும்: கலக்கொள், கலநெல் எனவும்: நீலக்கண், பவளவாய் எனவும்: நிலநீர் எனவும்: கொல்லுங்கொற்றன், பறக்குநாரை எனவும் வரும். அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் வரைநிலை யின்றே யாசிரி யர்க்க மெல்லெழுத்து மிகுத லாவயி னான். இஃது, இவ்வீற்றுள் மரூஉ முடிபு கூறுதல் நுதலிற்று. (யக) இ-ள்:-அகம் என் கிளவிக்கு கை முன்வரின் - அகம் என்னும் சொல்லிற்கு கை என்னும் சொல் முன்வரின், முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும் - முன் "மகர விறுதி' [சூத்திரம்-கரு ] என்றதனான் மகரம் கெட்டுநின்ற நிலைமொழி முதல்நின்ற அகரம் ஒழிய அதன்முன்நின்ற அகரமும் அகரத்தாற்பற்றப்பட்ட ககரமெய்யும் கெட்டு முடிதலும் அவைகெடாதுநின்று முடிதலும், வரைநிலை இன்று ஆசிரியர்க்கு- நீக்கும் நிலைமையின்று ஆசிரியர்க்கு; அ வயின் மெல்லெழுத்து மிகுதல் - அவ்விரண்டி டத்தும் மெல்லெழுத்து மிக்குமுடிக. உ-ம். அங்கை, அகங்கை எனவரும்.[ஒழிய-தவிர] இலமென் கிளவிக்குப் படுவரு காலை நிலையலு முரித்தே செய்யு ளான. (உய) இஃது,அவ்வீற்று உரிச்சொல்லுள் ஒன்றற்குச்செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று.