பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளய தொல்காப்பியம் - இளம்பூரணம் இன்னும் "எல்லாம்" என்னும் இலேசினானே, இவ்வீற்றுக்கண் மென்கணத்து மகரம் ஒழிந்தன வந்தவழி மகரம் அவ்வொற்றாய்த் திரிதலும் கொள்க, எல்லாருஞ் ஞான்றார்;-நீண்டார் எனவும்: எல்லீருஞ்ஞான்றீர்;- நீண்டீர் எனவும்: தாஞ்ஞான்றார்;- நீண்டார் எனவும்: நாஞ்ஞான்றாம் ;- நீண்டாம் எனவும்: யாஞ்ஞான்றேம்; நீண்டேம் எனவும் கொள்க. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா மெனும்பெயரூபிய ணிலையும் வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது. (2) இஃது, அவ்வீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும் உருப்பியலொடு மாட்டெறிந்து முடிபுகூறுதல் நுதலிற்று. இ-ள்:- அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் - அல்வழியைச் சொல்லு மிடத்தும் வேற்றுமைப்பொருட்புணர்ச்சியிடத்தும், எல்லாம் எனும் பெயர் உருபு இயல் நிலையும்.எல்லாம் என்னும் விரவுப்பெயர் உருபுபுணர்ச்சியின் இயல்பிலே நின்று வற்றுச்சாரியையும் இறுதி உம்முச்சாரியையும் பெற்றுமுடியும். வேற்றுமை அல்வழி சாரியை நிலையாது-அப்பெயர் வேற்றுமையல்லாத இடத்து சாரியைபெறுதல் நிலையா தாயே முடியும். மாட்டேறு ஏவாத அல்வழியிளையும் உருபிளோடு மாட்டெறிந்திவிலக்கிய மிரு தியான், அவ்வழிக்கண் வன்கணத்திறுதி உம்முப்பேறும் சிலைமொழி மகரக்கேடும் வருமொழி வல்லெழுத்துப்பேறும், மென்கணத்து மகரக்கேடும் பண்புத்தொகைக்கண் மகரக்கேட்டோடு இறுதி உம்முப்பேறும் கொள்க, உ உ-ம். எல்லாக்குறியவும்; - சிறியவும், தீயவும், பெரியவும் எனவும்: எல்லாவற்றுக் கோடும்;-செவியும், தலையும், புறமும் எனவும்: எல்லாஞான்றன ;- நீண்டன, மாண்டன எனவும்: எல்லாஞாணும்;-நூலும், மணியும், யாப்பும், வலிமையும், அடைவும், ஆட்ட மும் எனவும்: எல்லாவற்றுஞாணும்;-நூலும், மணியும், யாப்பும், வலிமையும், அடைய வும், ஆட்டமும் எனவும் வரும். எல்லாக் குறியரும்; சிறியரும், தீயரும், பெரியரும் என உயர்திணைக்கண்ணும் ஒட்டுக. ஈண்டுச் சாரியை பெற்றவழி, மகரக்கேடு வற்றின்மிசை ஒற்றாய்க் கெட்டது.இது விரவுப்பெயராகலின், ஈற்றுப் பொதுமுடிவிற்கு எலாதென்று சாரியை வல்லெழுத்துக் கொள்ளப்பட்டது. (உஎ) மெல்லெழுத்து மிகிண மான மில்லை. இது, மேற்கூறிய எல்லாம் என்பதற்கு அல்வழிக்கண் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. இ-ள்: மெல்லெழுத்து மியினும் மானம் இல்லை.அவ்வெல்லாமென்பது அல் வழிக்கண் மேல் இலேசினாற் கூறிய வல்லெழுத்தேயன்றி மெல்லெழுத்து மிக்கு முடியி னும் குற்றம் இல்லை. மேற்கூறிய செய்கைமேலே இது கூறினமையின், மகரக்கேடும் இறுதி உம்ப் பேறுங் கொள்க.