பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் ளயரு இ-ள்:-குயின் என் கிளவி இயற்கையாகும் - குயின் என்னும் சொல் திரியா,கி இயல்பாய் முடியும். உ-ம். குபின்குழாம்; செலவு, தோற்றம், பறைவு எனவரும். குயின் என்பது மேகம். எகின்மர மாயி னாண்மர வியற்றே. இது, திரிபு விலக்கி அம்மு வகுத்தல் நுதலிற்று. (சய ) இ-ள்: எகின் மரம் ஆயின் ஆண்மா இயற்று - எகின் என்னும் சொல் மரப் பெயராயின் ஆண்மரத்தினது இயல்பிற்றாய் அம்முப் பெற்று முடியும். உ-ம். எகினங்கோடு; செதிள், தோல், பூ எனவரும். ௩௩அ. இதுவும் அது. ஏனை யெனே யகரம் வருமே வல்லெழுத் தியற்கை முகுதல் வேண்டும். (சக) இ-ள்:- ஏனை எகின் அகரம் வரும் - ஒழிந்த மரமல்லா எகின் நிலைமொழிக்கண் அகரம் வந்து முடியும்; வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும் - அவ்விடத்து வரு மொழி வல்லெழுத்து இயல்பு மிக்கு முடிதல் வேண்டும். உ-ம். எகினக்கால்; செவி, தலை, புறம் எனவரும். மேலைச் சூத்திரத்தோடு இதனை ஒன்றாக ஓதாததனான், இயல்புகணத்துக்கண் ணும் அகரப்பேறு கொள்க. எகினஞாற்சி; யாப்பு, அடைவு எனவரும். 'இயற்கை' என்றதனான், அகரப்பேற்றோடு மெல்லெழுத்துப்பேறும் கொள்க. எகி னங்கால், செவி, தலை, புறம் எனவரும். ௩௩௯. கிளைப்பெய ரெல்லாங் கிளைப்ெெயரில் (2) இஃது, இவ்வீற்றிற் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல னகரவீற்றுக் கிளைப்பெய ரெல்லாம் ணகாரவீற்றுக் கிளைப்பெயர்போலத் திரியாது இயல்பாய் முடியும். உ-ம். எயின்குடி; சேரி, தோட்டம்,பாடி எனவரும். 'எல்லாஃ' என்றதனான், அக்குச்சாரியையும் வல்லெழுத்தும் பெற்று எயினக் கண்ணி என முடிதலும், பார்ப்பனக்கன்னி என நிலைமொழியீறு திரிந்து அக்கும் வல் லெழுத்தும் பெறுதலும், இனிச் சாரியை பெறாது ஈறு திரிந்து வேளாண்குமரி, வேளாண் வாழ்க்கை என முடிதலும் கொள்க. கூசடு. மீனென் கிளவி வல்லெழுத் துறள்வே. இதுவும். அவற்றுள் ஒன்றற்கு வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று. (n) இ-ள்:-மீன் என் கிளவி வல்லெழுத்து உறழ்வு - மீன் என்னும் சொல்தன் திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியும்- உ-ம். மீன்கண், மீற்கண்; சினை, தலை, புறம் எனவரும். (PP)