பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உ தொல்காப்பியம் - இளம்பூரணம் அவற்றுள், பொது நால்வகைத்து. "ஈவோன்றன்மை யீத லியற்கை, கொள்வோன் றன்மை கோடன் மரபென, ஈரிரன் டென்ப பொதுவின் றொகையே.' இதனான் அறிக. ஈவோர் கற்கப்படுவோரும் கற்கப்படாதோரும் என இருவகையர். கற்கப் படுவோர் நான்கு திறத்தான் உவமம் கூறப்படுவர். "மலைநிலம் பூவே துலாக்கோ லென்றின்னர், உலைவி லுணர்வுடையார்." இதனான் அறிக. இனிக் கற்கப்படாதார்க்குக் கூறும் உவமமும் நால்வகைத்து. "கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு, குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.' இதனான் அறிக. ஈதலியற்கை: "ஈதலியல்பே யியல்புறக் கிளப்பிற், பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப், பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன், புகழ்ந்த மதியிற் பொருந்து மோரையிற், றெளிந்த வறிவினன் றெய்வம் வாழ்த்திக், கொள்வோ னுணர்வகை அறிந்தவன் கொள்வரக், கொடுத்தன் மரபெனக் கூறினர் புலவர்."இதனான் அறிக. கொள்வோர் கற்பிக்கப்படுவோரும் கற்பிக்கப்படாதோரும் என இரு வகையர். கற்பிக்கப்படுவோர் அறுவகையர். அவர்தாம் "தன்மக னாசான் மகனே மன்மகன், பொருணனி கொடுப்போன் வழிபடுவோனே, யுரைகோ ளாளனோ டிவ ரென மொழிப. இதனான் அறிக. இவர்தன்மை: "அன்னங் கிளியே நன்னிற நெய் யரி, யானை யானே றென்றிவை போலக், கூறிக்கொள்ப குணமாண்டோரே.' இத னான் அறிக. இனிக் கற்பிக்கப்படாதார் எண்வகையர். "மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வன், அடுநோய்ப் பிணியாள னாறாச் சினத்தன், தடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட்டெண்மர், நெடுநூலைக் கற்கலாதார்." இதனான் அறிக. இவர்தன்மை: "குரங்கெறி விளங்கா யெருமை யாடே, தோணி யென்றாங் கிவையென மொழிப.' இதனான் அறிக. கோடன்மரபு: "கொள்வோன் முறைமை கூறுங் காலைப், பொழுதொடு சென்று வழிபடன் முனியான், முன்னும் பின்னு மிரவினும் பகலினும், அகலா னாகி யன்போடு புணர்ந்தாங், காசற வுணர்ந்தான் வாவென வந்தாங், கிருவென விருந்தே டவிழென வவிழ்த்துச், சொல்லெனச் சொல்லிப் போவெனப் போகி, நெஞ்சுகள னாகச் செவிவா யாகக், கேட்டவை கேட்டவை வல்லனாகிப், போற்றிக் கோட லவனது தொழிலே"; எத்திறத் தாசானுவக்கு மத்திறம், அறத்திற்றிரியாப் படர்ச்சிவழி பாடே"; "செல்வன் றெரிகிற்பான் மெய்ந்நோக்கிக் காண்கிற்பான், பல்லுரையுங் கேட்பான் மிகப்பெரிதும் காதலான், தெய்வத்தைப் போல மதிப் யான் றிரிபில்லான், இவ்வாறு மாண்பு முடையாற் குரைப்பவே, செவ்விதி நூலைத் தெரிந்து"; "வழக்கி னிலக்கண மிழுக்கின் றறிதல்,பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல், ஆசாற் சார்ந்தவை யமைவரக்கேட்டல், அம்மாண்புடையோர் தம்மொடு பயிறல், வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை, கடனாக் கொளினே மடநனி யிகக் கும்"; "அனைய னல்லோன் கொள்குவ னாயின், வினையி னுழப்பொடு பயன்றலைப் படா அன்". இவற்றான் அறிக. இவ்வாறு கோடன் மரபுடைய மாணாக்கன் நூன் முற்ற அறிந்தானாமாறு: "ஆசானுரைத்தவை யமைவரக் கொளினுங், காற்கூறல் லது பற்றல னாகும்"; "அவ்வினை யாளரொடு பயில்வகை யொருபால், செவ்விதினு ரைப்ப வவ்விருபாலும், மையறு புலமை மாண்புநனி யுடைத்தே." இவற்றான் அறிகூ