பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உ-ம். எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் ஆந்தை, பூந்தை எனவரும். இயல்பு என்றதனால், பெயரொற்றும் அகரமும் கெடாதேநின்று முடிந்தவாறே முடிதலும் கொள்க. ஆதந்தை, பூதந்தை எனவரும். 'துவா' என்றதனால், அழான், புழான் என நிறுத்திப் பொருந்தின செய்கை செய்து அழாந்தை புழாந்தை என முடிக்க. உருய. சிறப்பொடு வருவழி யியற்கை யாகும். இஃது,எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (BFL) இ-ள்:- சிறப்பொடு வருவழி இயற்கை ஆகும் - அவ் வியற்பெயர் பண்படுத்து வருவழி முன்கூறிய இருமொழிச் செய்கையும் தவிந்து இயல்பாய் முடியும். உ-ம். பெருஞ்சாத்தன்றந்தை, பெருங்கொற்றன் றந்தை எனவரும். வ உருக. அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியே. நிற்றலு முரித்தே யம்மென் சாரியை மக்கண் முறைதொ கூஉ மருங்கி னான். இது, மேலதற்கு வேறு ஒர் வருமொழிக்கண் எய்தாதது எய்துவித்தது. (ருசு) இ-ள்:-அ பெயர் மக்கள் முறை தொகும் மருங்கின் ஆன மெய் ஒழித்து அன் கெடுவழி - அவ்வியற்பெயர் மக்கள் என்னும் முறைப்பெயர் வந்துகூடும் இடத்தின் கண்ணும் பிறிதிடத்தும், தான் ஏறிய மெய்யை ஒழித்து அன்கெடு மல்வழி, அம் என் சாரியை நிற்றலும் உரித்து-அம் என்னும் சாரியை நிற்றலும் உரித்து. உ-ம் சாத்தங்கொற்றன், கொற்றங்கொற்றன் எனவும்; சாத்தங்குடி, கொற்றங் குடி எனவும் வரும். கூருஉ. தானும் பேனுங் கோனு மென்னும் ஆமுறை யியற்பெயர் திரிபிட னிலவே (ருரு) இது, மேலதற்கு ஒருவழி எய்தியது விலக்கிப் பிரிதுவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- தானும் பேனும் கோனும் என்னும் அ முறை இயர்பெயர் - அவ்வியற் பெயருள் தானும் பேனும் கோனும் என்னும் முறைமையினையுடைய இயற்பெயர்கள் தந்தைகள் மக்கள் என்னும் முறைப்பெயரொடு புணரும்வழி, திரிபு இடன் இல-மேற் கூறிய திரிபுகள் இன்றி இயல்பாய் முடியும். உ-ம். தான்றந்தை, பேன்றந்தை, கோன்றந்தை எனவும்; தான்கொற்றன் பேன்கொற்றன், கோன்கொற்றன் எனவும் வரும். கூருங. தான்யா னெனும்பெய ருருபிய னிலையும். (c) இது, விரவுப்பெயருள் தான் என்பதற்கும் உயர்தினைப்பெயருள் யான் என்பதற் கும் வேற்றுமைக்கண் தொகைமரபினுள் எய்தியது விலக்கிப் பிரிதுவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:-தான் யான் எனும் பெயர் உருபு இயல் நிலையும் - தான் என்னும் விரவு பெயரும் யான் என்னும் உயர்திணைப்பெயரும் மேல்தொகைமரபினுட் கூறிய இயல்பு