பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிறப்புப்பாயிரம் சிறப்புப் பதினொரு வகைத்து: "ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை, நூற் பெயர் யாப்பே நுதலிய பொருளே, கேட்போர் பயனோ டாயெண் பொருளும், வாய்ப்பக் காட்டல் பாமீரத் தியல்பே"; "காலன் களனே காரண மென்றிம், மூவகை யேற்றி மொழிக்கு முளரே". இவற்றான் அறிக. இனி, அச்சிறப்பிலக் கணம் செப்புமாறு: "பாயிரத் திலக்கணம் பகருங்காலை, நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி, ஆசிரியத் தானும் வெண்பா வானு, மருவிய வகையா னுவறல் வேண்டும்". இதனான் அறிக. நூல் செய்தான் பாயிரம் செய்வானல்லன், "தோன்றா தோற்றித் துறை யல முடிப்பினுந், தான்றற் புகழ்தல் தகுதி யன்றே" என்பவாகலின். பாயி ரம் செய்வார் தன் ஆசிரியனும், தன்னோடு ஒருங்கு கற்ற மாணாக்கனும், தன் மாணாக்கனும் என மூவகையர். அவருள் இந்நூற்குப் பாயிரம் செய்தார் தன்னோடு ஒருக்கு சுற்ற பனம்பாரனார். அ இ-ள் - -வடவேங்கடம் தென்குமரி அ இடைத் தமிழ் கூறும் நல் உலகத்து வழக்கும் செய்யுளும் அ இருமுதலின் வடக்கின்கண் னுளதாகிய வெங்கடமும் தெற்கின்கண் ணுளதாகிய குமரியு மாகிய அவற்றை எல்லையாக வுடைய நிலத்து வழங்கும் தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்களான் வழங்கும் வழக்கும் செய்யுளுமாகிய இரு காரணத்தானும், எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி-எழுத் திலக்கணத்திளையும் சொல்லிலக்கணத்தினையும் பொருளிலக்கணத்திளையும் ஆராய்ந்து, செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு - (அவ்வாராய்ச் சியிற் குறைபா டுடையவற்றிற்குச்) செந்தமிழினது இயல்பு பொருத்தின செக் தமிழ் நிலத்து வழக்கோடு முதல்நூல்களிற் சொன்னவற்றினைக் கண்டு, முறைப் பட எண்ணி-அவ்விலக்கணம் முறைப்பட ஆராய்ந்து, நிலம் தரு திருவின் பாண்டி யன் அவையத்து - மாற்றாரது, நிலத்தினைத் தன்கீழ் வாழ்வார்க்குக் கொண்டுகொடுக் கும் போர்த்திருவிளையுடைய பாண்டியன் மார்த்தியது அவைக்கண்ணே, அறம் கரை காவின் கால்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு (அல்லலையும் ளார்க் கேற்பத் தெரிந்தே நின்ற) மெய் சொல்லும் நாவினையுடைய நான்குவேதத் தினையும் முற்றவுணர்ந்த அதங்கோடு என்கின்ற ஊரின் ஆசானுக்கு, அரில் தப தெரிந்து - கடா அறத் தெரிந்துகூறி, மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி - (அவ் வெழுத்தும் சொல்லும் செய்கின்றுழி முன்னை நூல்போல் எழுத்திலக்கணம் சொல் லுட்சென்று) மயங்காத முறைமையானே எழுத்திலக்கணத்தினை வேறு தெரி வித்து, மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என தன் பெயச் தோற்றி - (அவ்வாறு செய்கின்றுழி) மிக்க நீரையுடைய கடலாகிய எல்லையையடைய வுலகின்கண்ணே, இந்திரவுற் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணத்தினை நிறைய அறிந்த பழையகாப்பியக்குடியினுள்ளோனெனத் தன் பெயரைத் தோற்றுவித்து, போக்கு அறு பனுவல்-நூற்க்குச் சொல்லப்பட்ட குற்றங்களற்ற தன்னூ லுள்ளே, புலம் தொகுத்தோன் - அவ்விலக்கணங்களைத் தொகுத்துச் கூறினான், (அவன் யாரெ னில்,) பல் புகழ் நிறுத்த படிமையோன் - (தவத்தான்வரும்) பல்புகழ்களை உலகிலே நிறுத்தின தலவொழுக்கத்தினையுடையான். வழக்கும் செய்யுளும் அ இரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் காடி முறைப்பட எண்ணி, பாண்டியன் அவையத்து அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத்