பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளசஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் சஉஅ. சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும் யாவினா முதலிய மென்றொடர் மொழியும் ஆபிய றிரியா வல்லெழுத் தியற்கை. இதுவும், அவ் ஈற்றுள் ஒன்றன்கண் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணா வின்ற இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது. ற இ-ள்;-சுட்டு சினை நீடிய மென்றொடர்மொழியும் - சுட்டாகிய சினையெழுத்து ரீண்ட மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், யா வின முதலிய மென்னெடர் மொழியும் - யா என்னும் வினா முதலாகிய மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், வல்லெழுத்து இயற்கை அ இயல் திரியா - (மேற்கூறிய) வல்லெழுத்து இயற்கையாகிய அவ் இயல்பில் திரியா ( முடியும்}. உ-ம்:- ஆங்குக்கொண்டான்; ஈங்குக்கொண்டான், ஊங்குக்கொண்டான், யாங்குக்கொண்டான்; சென்றான்,தந்தான், போயினான் எனவரும். 'இயற்கை' என்றதனான், அக்குற்றுகர ஈற்று வினையெச்ச முடிபு கொள்க. செத் துக்கிடந்தான், இருந்தகொண்டான் எனவரும். [மென்றொடர்மொழி' என்ற இரண்டும் ஆகுபெயர். அகர நீட்டம் செய்யுள் விகாரம்.] உசுபாளினா மொழியே வியல்பு மாகும். இது, மேலவற்றுள் ஒன்றன்மேல் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- யா வினா மொழி இயல்பும் ஆகும் -(அவற்றுள்,) யா வினா மொழி (மேற் கூறிய விகாரமேயன்றி) இயல்பாயும் முடியும், உ-ம்:-யாங்குக் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவரும். () சஙய. அந்தான் மொழியுந் தந்நிலை திரியா. இது, மேலவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. இ-ள்: அ நால் மொழியும் - (சுட்டுமுதல் மூன்றும் யா முதல் மொழியுமாகிய) அந்நான்கு மொழியும், தம் நிலை திரியா-தம் மெல்லொற்று நிலை திரிந்து வல்லொற்று ஆகாது முடியும். 'லை' என்றதனால், மெல்லொற்றுத்திரியாது திக்கு முடிவன பிறவும் கொள்க உ-ம்:- அங்குக் கொண்டான், இங்குக்கொண்டான், உங்குக் கொண்டான், எங் குக் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவரும். 'யாமொழி' என்னாது 'வினா' என்றதனால், பிற இயல்பாய் முடிவனவும் கொள்க. முந்து கொண்டான், பண்டு கொண்டான், இன்று கொண்டான், அன்று கொண்டான் எனவரும். ['ஏகாரம்' அசை] (உச)