பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சஎஉ. எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். நூறென் கிளவி யொன்று முத லொன்பாற் கிறுசினை யொழிய வினவொபறு மிகுபே. இது, நூறு என்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. இ-ள்:- நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகும் - தூறு என்றும் சொல் ஒன்று முதல் ஒன்பான்களோடு புணருமிடத்து ஈறாகிய குற்றியலுகரமும் அவ்வுகரம் ஏறிய மெய்யாகிய சினையும் கெடாது நிற்ப (சினைக்கு) இனமாகிய இன ஒற்று மிக்குமுடியும். உ-ம் :- நூற்றொன்று; இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு,ஏழு, எட்டு, ஒன்பது எனவரும். 'ஈறுசினை' என்று ஒதிய மிகையானே, நூறு என்பதனோடு பிற எண்ணும் பிற பொருட்பெயரும் இவ்விதியும் பிறவிதியும் முடியுமாறு கொள்க. நூற்றுக்கோடி, நூற்றுப்பத்து, நூற்றுத்தொண்ணூறு எனவும்; நூற்றுக்குறை, நூற்றடுக்கு எனவும் வரும். 'ஏகாரம்' ஈற்றசை) சஎ௩. அவையூர் பத்தினு மத்தொழிற் றாகும். • (+) இஃது, அந்நூறு என்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்கள் அடையடுத்தவழிப் புணருமாறு கூறுகின்றது. இ-ன் :- அவை ஊர்பத்திலும் அத்தொழிற்று ஆகும் - (அந்நூறு என்பது)ஒன்று முதல் ஒன்பான்களான் ஊரப்பட்ட பத்தினேடு புணருமிடத்தும் அத்தொழிற்றய் இன ஒற்று மிக்கு முடியும். உ-ம்: நூற்றொருபஃறு; இருபஃது, முப்பஃது, காற்பஃது, ஐம்பஃது, அது பஃது, எழுபஃது, எண்பஃது எனவரும். 'ஆகும்' என்றதனான், கிலைமொழியடையடுத்து வரும் முடியும் கொள்க. ஒரு நூற்ருெருபஃது என ஒட்டுக. சஎச. அளவு நிறையு மாயிய திரியா குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையும் முற்பிளத் தன்ன வெண்மனார் புலவர். (Off 67) இஃது, அந்நூறு என்பதனோடு அளவுப்பெயரும் கிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது. இ-ள் :-அளவும் நிறையும் அ இயல் திரியா - (அந்நூறு என்பதனோடு புணரு மிடத்து)அளவுப்பெயரும் நிறைப்பெயரும் மேற்கூறிய இயல்பில்திரியாதே நின்று இன வொற்று மிக்கு முடியும். குற்றியலுகரமும் வல்லெழுத்து இயற்கையும் முன் கிளந் தால் அன்ன என்மனார் புலவர் (அவ்விடத்துக்) குற்றியலுகரம் கெடாமையும் (இன ஒற்று மிக்கு வன்டெர்மொழியாய் கின்றமையான் வருமொழி) வல்லெழுத்து மிகும் இயல்பும் மேல் (வன்னொடர்மொழிக்குக் கூறிய தன்மையவென்று சொல்லுவர் புலவர். உ-ம்:- நூற்றுக்கலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்.