பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளருகூ தொல்காப்பியம்- இளம்பூரணம். 'திரியா' என்றதனான், நூறு என்பது அடையடுத்த வழியும் இவ்விதி கொள்க. உ-ம்:-ஒரு நுற்றுக்கலம், இருநூற்றுக்கலம் என ஒட்டுக.[ஆகாரம் செய்யுள் விகாரம்,கிளந்து என்பது வினையெச்சத்தொகை.] எரு. ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி ஒன்றுமுத லொன்பார் கொற்றிடை மிகுமே நின்ற வாய்தங் கெடுதல் வேண்டும். இஃது, ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்கள் அடையடுத்த பத்தினோடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. இ-ள்:- ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி - ஒன்று முதல் எட்டு ஈறாகப் பத்து என்னும் எண் ஊரப்பட்ட சொற்கள், ஒன்று முதல் ஒன்பாற்கு-அவ்வொன்று முதல் ஒன்பான்கள் வருமொழியாய் வந்து புணருமிடத்து, நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும் -(ஆண்டு) நின்ற ஆய்தம் கெட்டு முடிதல் வேண்டும், ஒற்று இடை மிகும் - * (கெட்ட வழி இனவொற்றாய் ஓர் தகப்) ஒற்று இடை மிக்கு முடியும். உ-ம்:- ஒருபத்தொன்று, இருபத்தொன்று; ஒருபத்திரண்டு, இருபத்திரண்டு; ஒருபத்து மூன்று, இருபத்துமூன்று என ஒட்டிக்கொள்க. 'நின்ற' என்றதனான், மேல் ஒரு பதிற்றுக்கலம் என்னும் முடிபிற்கு இன்பேறும் கொள்க. (ஏகாரம் ஈற்றசை.) சஅ÷. ஆயிரம் வரினே யின்னாஞ் சாரியை ஆயி னேத்திடை மிகுகலில்லை இஃது, அவ்வடையடுத்த பத்தினோடு ஆயிரத்தினைப் புணர்க்கின்றது. (ra) இ-ள்:- ஆயிரம் வரின் சாரியை இன் ஆம் (அவ்வொன்று முதலாகிய பத்தூர் கிளவி முன்) ஆயிரம் என்பது வரின் இடை வந்து புணருஞ்சாரியை இன் ஆம். அ வயின் ஒற்று இடை மிகுதல் இல்லை - அவ்விடத்து (முன் கூறிய) ஒற்று இடை மிகுதல் இன்றி முடியும். உ-ம்:- ஒருபதினாயிரம், இருபதினாயிரம் என ஒட்டுக- 'அவயின்' என்றதனான், ஒருபதிற்றுலகம் என்னும் முடிபிற்கு உகரமும் வல் லெழுத்துப் பேறும் கொள்க. (ஏகாரம் அசை. ஆகாரம் செய்யுள் விகாரம்.) சஎள. அளவு நிறையு மாயிய றிரியா. (எய) இஃது, அவ்வொன்று முதலாகிய பத்தூர் கிளவி முன் அளவுப்பெயரும் நிறைப் பெயரும் முடியுமாறு கூறுகின்றது. இ-ள்:- அளவும் நிறையும் அ இயல் திரியா - (அவ்வொன்று முதலாகிய பத்தூர் கிளவி முன்) அளவுப்பெயரும் நிறைப்பெயரும் (மேல்) ஆயிரத்தோடு புணரும் வழி முடிந்த இயல்பில் திரியாதே நின்று இன்பெற்று முடியும். உ-ம்:-ஒருபதின்கலம், இருபதின்கலம் ; சாடி, தாதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்: ஒருபதின் கழஞ்சு, தொடி, பலம் எனவும் கொள்க. 'திரியா' என்றதனான், ஒருபதிற்றுக்கலம் என்னும் முடிபிற்கு இன்னின் னகரம் இரட்டிய றகரமாகலும், ஒருபதினாழி என்னும முடிபின்கண் வருமொழி நகரம் திரிந்தவழி நிலைமொழியின் னகரக்கேடும் கொள்க.[ஆகாரம் செய்யுள் விகாரம்.) (எக)