பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம். இளம் பூரணம் எழுத்ததிகாரம். இவ்வதிகரம் என் நுதலி எடுத்துக்கொள்ளப்பட்டதோ வெனின், அதிகாரம் நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயர் உரைப்பவே அடங்கும். அதிகாரம் என்ன பெயர்த்தோ வெனின், எழுத்ததிகாரம் என்னும் பெயர்த்து. எழுத்து ணர்த்தினமைக் காரணத்திற்பெற்ற பெயர் என உணர்க. எழுத்து எனைத்துவகையான் உணர்த்தினாரோ வெனின், எட்டுவகையானும் எட்டிறந்த பலவகையானும் உணர்த்தினாரென்பது. அவற்றுள், எட்டுவகையாவன எழுத்து இனைத் தென்றலும், இன்ன பெயர வென்றலும், இன்ன முறைமைய வென் றலும், இன்ன அளவின வென்றலும், இன்ன பிறப்பின வென்றலும், இன்ன புணர்ச் சிய வென்றலும், இன்ன வடிவின வென்றலும், இன்ன தன்மைய வென்றலும், எனவே, அவற்றுள் தன்மையும் வடிவும் ஆசிரியர்தாம் உணருவரெனினும், நமக்கு உணர்தல் அருமையின் ஒழிந்த ஆறுமே இதனுள் உணர்த்தினார் என உணர்க. இனி, எட்டிறந்த பலவகையாவன உண்மைத்தன்மையும், குறைவும், கூட்டமும், பிரி வும், மயக்கமும், மொழியாக்கமும்,நிலையும்,இனமும், ஒன்று பலவாதலும், திரிந்த தன்திரிபது வென்றலும், பிரிதென்றலும் அதுவும் பிறிதும் என்றலும்,நிலையிற் றென்றலும்,நிலையா தென்றலும், நிலையிற்று நிலையா தென்றலும், இன்னோரன்னவும் என இவை. இவையெல்லாம் ஆமாறு மேல் வந்தவழிக் கண்டுகொள்க. இவ்வதிகாரத் திலக்கணம் கருவியும் செய்கையும் என இருவகைத்து. அவற் றுள், கருவி புறப்புறக்கருவியும், புறக்கருவியும், அகப்புறக்கருவியும் அகக்கருவி யும் என நான்குவகைப்படும். செய்கை புறப்புறச்செய்கையும், புறச்செய்கையும், அகப்புறச்செய்கையும், அகச் செய்கையும் என நான்கு வகைப்படும். நூன்மரபும் பிறப்பியலும் புறப்புதக்கருவி; மொழிகை புதக்கருவி புணசியில் அகப்புறம் கருவி. "ஏகர வொகரம் பெயர்க்கீ றாகா, முன்னிலை மொழிய வென்மனார் புலவர்' (உயிர் மயங்கியல் - எய] என்றாற்போல்வன அகக்கருவி. "எல்லா மொழிக்கு முயிர் வரும் வழியே, உடம்படு மெய்யி னுருபுகொளல் வரையார்", [புணரியல்-௩அ] என்றாற்போல்வன புறப்புறச்செய்கை. "லனவெனவரூஉம் புள்ளி முன்னர்த், த ந வெனவரிற் றனவா கும்மே" [தொகைமரபு -எ] என்றார்போல்வன புறச் செய்கை. "உகரயொடு புணரும் புள்ளி யிறுதி, யகரமு முயிரும் வரும்வழி யியற்கை" [தொகைமரபு-உக] என்றாற்போல்வன அகப்புறச்செய்கை. தொகைமரபு முதலிய ஒத்தினுள், இன்ன ஈறு இன்ன வாறு முடியுமெனச் செய்கை கூறுவன வெல்லாம் அகச்செய்கை. பவே முதலாவது - நூன்மரபு. இவ்வோத்து என் நுதலிற்றோ வெனின், அதுவும் அதன் பெயர் உரைப் அடங்கும். இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை