பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எனது நூல்களும் பிரசுரங்களும். -*- மனம்போலவாழ்வுடமூன்றாம் பதிப்பு. இந்து இம்மையின்பத்தையும் மறுமையின்பத்தையும் அடைவதற்குரிய நெறிகளை மிகத்தெளிவாகக் கூறுகின்ற ஓர் அரிய நூல். இப்பதிப்பு நன்கு சீர்திருத்தப்பெற்றும், ஜேம்ஸ் ஆலன் சமித்திரம் சேர்க்கப்பெற்று முன்னது. இதன் விலை அணா 8. அகமே புறம் - மூன்றாம் பதிப்பு இஃது இகத்திலும் பாத்திலும் மேலான நிலைகளை அடைவதற்குரிய மார்க்கங்களை வரிசைப்படுத்தி மிக இனிமை யாகக் கூறுவது. இப்பதிப்பு நன்றாக அழகுபடுத்தப்பெற்றும், ஜேம்ஸ் ஆலன் சரித்திரம் சேர்க்கப்பெற்று முள்ளது. இதன் விலை அணு B. வலிமைக்கு மார்க்கம் இரண்டாம் பதிப்பு இது மிக எளிய நிலைமையை எய்தியுள்ளோர் மிக வலிய நிலைமையை எய்துதற்குரிய வழிகளை யாவரும் எளிதில் கைக்கொள்ளத்தக்கவாறு தெளிவாகவும் விரிவாகவும் இனிய தமிழ் நடையில் எழுதப்பெற்றது. இதன் விலை அணா 12. மெய்யறிவு - மூலமும் உளலரம். இந்து அறம்,பொருள்,இன்பம், வீடு என்னும் நான்கையும், அவற்றை அடையும் வழிகளையும் பல உவமானங்களோடு மிகச் சுருக்கமாகவும் மிக விளக்கமாகவும் கூறுவது; பலதேசத்து நீதி நூல்களின் சாரம் எனத்தக்கது. இதன் விலை அணா 12. மெய்யறம் - மூலமும் உரையும், இது திருவள்ளுவர் திருக்குறளுக்கு வழிநூல்; மாணவவியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் என்னும் ஐந்து இயல்களால் புருஷார்த்தம் கான்கையும் தற்கால இயம்புக்குத் தக்க வேறுபாடுகளோடு கூறுவது. இதன் விலை ரூபா 1. எனது பாடற்றிரட்டு - அரும்பத உரையுடன். இஃது ஆன்ம ஞானத் தையும் கடவுள் ஞானத்தையும் உலக அறியையும் அடையச்செய்வனவும், மரித செல்வர்க்கும் பொதுவான ஒழுக்கங்களைப் போதிப்பனவுமாகிய அழகிய பல வகைப் பாக்கள் சில நூறு அடங்கியது. இதன் விலை அணா ணா 12.