பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் நூன்மரபு. உ௩ டறலள வென்னும் புள்ளி முன்னர்க் கசப வென்னு மூவெழுத்துரிய. இது, மெய்மயக்கம் ஆமாறு உணர்த்தல் நுதலிற்று. கங இள்:-டறலள என்னும் புள்ளி முன்னர்-ட றலள என்று சொல்லப் படும் புள்ளிகளின் முன்னர், கசப என்னும் மூ எழுத்து உரிய-கசப என்று சொல்லப்படும் மூன்றெழுத்தும் மயங்குதற்கு உரிய. உ-ம். கட்க, கற்க, செல்க, கொள்க எனவும், கட்சிறார், கற்சிறார், செல்சிறார், கொள்சிறார் எனவும், கட்ப, கற்க, செல்ப, கொள்ப எனவும் வரும். மேல் தெரியுங்காலை' என்றதனான், இம்மெய்மயக்கம் கூறுகின்ற சூத்திர மெல்லாம் பலபடியால் மயக்கம் கொள்ளச் சொல்நோக்கு உடையவெனினும், வழக் கினோடு பொருந்த ஒன்றனோடு ஒன்றன்றி மயங்காதென்பது கொள்க. மெய் மயக்கம் ஒருமொழிக்கும் புணர்மொழிக்கும் பொதுவாகலின், மேற் கூறும் புணர் மொழிச் செய்கையெல்லாம் தலையாய அறிவினோரை நோக்க ஒருவாற்றாற் கூறி யவா றாயிற்று. உசு. அவற்றுள் இதுவும் அது. லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும். (உங). இ-ள் :- அவற்றுள்- மேற்கூறிய நான்கனுள்ளும், லளஃகான் முன்னர்-லகார ளகாரங்களின் முன்னர், யவவும் தோன்றும் -கசபக்களேயன்றி யகர வகரங்களும் தோன்றிமயங்கும். உ-ம். கொல்யானை, வெள்யானை, கோள்வளை, வெள்வளை எனவரும். (உச) உரு. ஙஞணந மனவெனும் புள்ளி முன்னர்த் இதுவும் அது. தத்த மிசைக ளொத்தன நிலையே. இ-ள் :-ஙஞணநமன என்னும் புள்ளி முன்னர்- ஙஞணநமன என்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர், தத்தம் மிசைகள் ஒத்தன - (நெடுங்கணக்கி னுள்) தத்தமக்கு மேல்நிற்கும் எழுத்தாகிய கசட தபறக்கள் பொருந்தின, நிலை-மயங்கி நிற்றற்கண். (ஏகாரம் ஈற்றசை.) உ-ம். தெங்கு, மஞ்சு, வண்டு, பந்து, கம்பு கன்று எனவரும். (உரு) உசு. அவற்றுள் இதுவும் அது. ணனஃகான் முன்னர்க் கசஞப மயவவ் வேழு முரிய. இ-ள் :-அவற்றுள்- மேற்கூறப்பட்ட மெல்லெழுத்து ஆறனுள், ணனஃகான் முன்னர் ணகார னகாரங்களின் முன்னர், கசஞபமயவ ஏழும் உரிய (உறக்களே யன்றி,) க சஞபமயவு என்று சொல்லப்படும் ஏழும் மயங்குதற்கு உரிய.