பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாவது மொழிமரபு. இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மொழிகளுக்கு எழுத்தான் வரும் மரபு உணர்த்தினமையின் மொழிமரபு எனப்பட்டது. இதனுள் கூறுகின் றது தனிநின்ற எழுத்திற் கன்றி மொழியிடை [நின்ற] எழுத்திற்கு எனவுணர்க. கூசு. குற்றிய லிகர நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக் காவயின் வருஉ மகரமூர்ந்தே இத்தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், சார்பிற்றோற்றத்து எழுத் துக்களிற் குற்றியலிகரத்தில் ஒருமொழிக்குற்றியலிகரத்திற்கு இடமும் பற்றுக் கோடும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் - குற்றியலிகரம்-ஒருமொழிக்குற்றியலிகாம், உரையசைக் கிளவிக்கு- உரையசைச் சொல்லாகிய மியா என் முதற்கு, ஆ வயின் வரூஉம் - (சினை யாக) அச்சொற்றன்னிடத்து வருகின்ற, யா என் சினைமிசை-யா என் சினை மிசை, மகரம் ஊர்ந்து நிற்றல்வேண்டும்-மகர ஒற்றினை ஊர்ந்து நிற்றலைவேண்டும் (ஆசிரியன்). உ-ம். கேண்மியா எனவரும். மியா என்னும்சொல் இடம். றுக்கோடு. யா என்னும் சினையும் மகரம்போலக் குறுகுதற்கு ஒரு சார்பு. கூரு. புணரிய னிலையிடைக் குறுகலு முரித்தே உணரக் கூறின் முன்னர்த் தோன்றும் மகரம் பற் (க) இது, குற்றியலிகரம் புணர்மொழியுள்ளும் வருமென்று உணர்த்துதல் நுத விற்று. புணர்தல் இ-ள் :- புணர் இயல் நிலை இடையும் - இருமொழி தம்மிற் இயன்ற நிலைமைக்கண்ணும், குறுகல் உரித்து - அவ்விகரம் குறுகுதலுடைத்து. உணரக்கூறின் (ஆண்டை இடத்தினையும் பற்றுக்கோட்டினையும் ஈண்டு) உணரக் கூறப்புகின், முன்னர் தோன்றும் -(அது வேண்டுவதில்லை.) குற்றியலுகரப்புணரி யலுள் (அவ்விடனும் பற்றுக்கோடும்) தோன்றும். 'புணரிய னிலை யிடையும்' என மொழிமாற்றி உரைக்க. முன்னர்த்தோன்று மாறு: "யகரம் வரும்வழி யிகரங் குறுகும், உகரக் கிளவி துவரத்தோன்றாது" [குற்றியலுகரப் புணரியல்-ரு ] என்பதனுள் அறிக. உகரம்சார்ந்த வல்லெழுத்துப் பற்றுக்கோடு. உ-ம். நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கியாது, குரங் கியாது எனவரும். ஙசு. நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே. (e) இஃது, ஒருமொழிக் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த் அதல் நுதலிற்று.