பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

௩உ தொல்காப்பியம் - இளம்பூரணம் அகூ. ககார ஙகார முதனா வண்ணம். இது, மெய்களுட் சிலவற்றிற்குப் பிறவி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:ககாரம் ஙகாரம் நாமுதல் அண்ணம் (முதல்) - ககாரமும் ஙகாரமும் நாமுதலும் அண்ணமுதலும் உறப் பிறக்கும். கூடு. சகார ஞகார மிடைநா வண்ணம். இதுவும் அது. (67) இ-ள்:- சகாரம் ஞகாரம் நாஇடை அண்ணம் (இடை) - சகாரமும் ஞகாரமும் நாவது இடையும் அண்ணத்தது இடையும் உறப் பிறக்கும். கூக. டகார ணகார நுனிநா வண்ணம். இதுவும் அது. (a) இ-ள்:-டகாரம் ணகாரம் நாநுனி அண்ணம் (நுனி) -டகாரமும் ணகாரமும் நாவது நுனியும் அண்ணத்தது நுனியும் உறப் பிறக்கும். கூஉ. அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின. இது, மேலனவற்றிற்கு ஒர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (5) இ-ள்:-அ ஆறு எழுத்தும் மூவகை பிறப்பின - மேற்கூறப்பட்ட ஆறு எழுத் தும் நிரனிறைவகையான் (அறுவகைப் பிறப்பின அல்ல.) மூவகைப் பிறப்பின. கூ௩. அண்ண நண்ணிய பன்முதன் மருங்கின் நாநுனி பரந்து மெய்யுற வொற்றத் தாமினிது பிறக்குந் தகார நகாரம். இதுவும் மெய்களிற் சிலவற்றிற்குப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. (@) இ-ள்:-அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கின் -அண்ணத்தைப் பொருந் திய பல்லினது அணிய இடத்தின்கண்ணே, நா நுனி பரந்து மெய் உற ஒற்ற-நாவி னது நுனி பரந்து வடிவை உறும்படி ஒற்ற, தாம் இனிது பிறக்கும் - தாம் இனி தாகப் பிறக்கும், தகாரம் நகாரம்-தகாரமும் கநாரமும். னான், முன்னே 'உறுப்புற்றமைய' என்று வைத்துப் பின்னும் 'மெய்யுற' என்றத் எல்லா எழுத்துக்களும் மெய்யுற்றபோதே இனிது பிறப்பதென்பது கொள்க. கூச. அணரி நுனிநா வண்ண மொற்ற இதுவும் அக. ரஃகா னஃகா னாயிரண்டும் பிறக்கும். (கக) இ-ள்:- அணரி நுனிநா அண்ணம் ஒற்ற - அணர்ந்து நுனிநா அண்ணத்தைச் சென்று ஒற்ற, றஃகான் னஃகான் அ இரண்டும் பிறக்கும் - றகார னகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும். இங்குநின்று நெடுங்கணக்கு முறைமை விட்டு நா அதிகாரம்பட்டது கண்டு கூறுகின்ற தெனவுணர்க. (கஉ)