பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம்- இளம்பூரணம். ளகஉ. மருவின் றொகுதி மயங்கியன் மொழியும் உரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே. இஃது, இலக்கணவழக்கேயன்றி உணர்த்துதல் நுதலிற்று. மரூஉக்களும் புணர்க்கப்படும் என்பது மொழியும் -(இலக்கண வழக்கே இ-ள்:-மருவின் தொகுதி மயங்கு இயல் யன்றி) மரூஉத்திரளாகிய தலைதடுமாறாக மயங்கின இயல்பையுடைய இலக்கணத் தொடு பொருந்தின மரூஉவழக்கும், உரியவை உள புணர் நிலைச் சுட்டு-உரியன உள புணரும் நிலைமைக்கண். உ-ம். மீகண், முன்றில் எனவரும். 'நிலை' என்றதனான், இலக்கணத்தொடு பொருந்திய மரூஉவழக்கல்லா மரூஉ வழக்கும் புணர்க்கப்படும் எனக்கொள்க. ளகஙு. வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையும் எழுத்தே சாரியை யாயிரு பண்பின் ஒழுக்கல் வலிய புணருங் காலை. (க) இது, நால்வகைப்புணர்ச்சியுள் மிக்கபுணர்ச்சி இத்தன்மைத் தென்பதஉம், அந்நால்வகைப்புணர்ச்சியும் வேறு ஓர் ஆற்றான் இருவகையா மென்பதுஉம் உணர்த் துதல் நுதலிற்று. இ-ள் :- வேற்றுமை குறித்த புணர் மொழி நிலையும்,-வேற்றுமையது பொருண் மையினைக் குறித்த புணர் மொழியது நிலைமையும், வேற்றுமை அல்வழி புணர் மொழி நிலையும் - வேற்றுமையல்லாத அல்வழியிடத்துப் புணர் மொழியது நிலைமை யும், எழுத்து சாரியை அ இரு பண்பின் ஒழுக்கல் வலிய-(மிக்க புணர்ச்சிக்கண்) எழுத்துமிகுதலும் சாரியைமிகுதலு மாகிய அவ்விரண்டு இலக்கணத்தானும் நடாத் துதலைத் தமக்கு வலியாகவுடைய, புணரும்காலை-அவைபுணருங்காலத்து. விளங்கோடு, மகவின்கை, விளக்குறிது, பனையின்குறை எனக்கண்டுகொள்க. 'ஒழுக்கல்வலிய' என்றதனான், எழுந்தும் சாரியையும் உடன்பெறுதல் கொள்க. அவற்றுக்கோடு, கலத்துக்குறை எனவரும். அவ்வழி முற்கூறாதது, வேற்றுமையல்லாதது அவ்வழியென வேண்டலின் என்பது முன்னே 'புணர்மொழி' என்று வைத்து, 'புணருங்காலை' என்றதனாற் புணர்ச்சிக்கண்ணே வேற்றுமை அல்வழி என இரண்டாவது, அல்லாக்கால், வேற் றுமையெனவே படுமென்பது கொள்க. ஈண்டு அல்வழி யென்றது பெரும்பான்மை யும் எழுவாயினை. ளக ச. ஐஒடு குஇன் அ துகண் ணென்னும் அவ்வா றென்ப வேற்றுமை யுருபே. (ய) இது, மேல் வேற்றுமை யென்னப்பட்ட அவற்றது பெயரும், முறையும், தொகையும் உணர்த்துதல் நுதலுற்று.