பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நோல்காப்பியம்- இளம்பூரணம் மெய்பிறி தாகிடத் தியற்கை யாகலும் அன்ன பிறவுந் தன்னியன் மருங்கின் மெய்பெறக் கிளந்து பொருள்ளமைக் இசைக்கும் ஐகார{வேற்றுமைத் திரிபென மொழிப. ந் இஃது, இரண்டாம் வேற்றுமைத்திரிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும்-மெல்லெழுத்து மிகுமிடத்து வல்லெழுத்தாதலொடு தோன்றுதலும் வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு மீதானதலும்வல்பெழுத்த மிருகிடத்து மெல்லெழுத்தாதலொடு தோன்றுதலும், இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் - இயற்கையிடத்து மிகுதி தோன்றுதலும், உயிர் மிக வருவழி உயிர் கெட வருதலும்-உயிர்மிக வருமிடத்து அவ்வுயிர் கெட வ ருதலும், சாரியை உளவழி சாரியை கெடுதலும் - சாரியை உள்ள இடத்து அச்சாரியை கெடுதலும், சாரியை உளவழி தன் உருபு நிலையலும்- சாரியை உள்ள விடத்து அச்சாரியையொடு தன்னுருபு நிற்றலும், சாரியை இயற்கை உறழத்தோன்றலும்-சாரியை பெறுகவென்றவழி அச்சாரியை பெறாது இயல்பாகிய மொழிகள் வருமொழியினும் நிலைமொழியினும் மிக்கும் திரிந்தும் வருமொழிவல், லெழுத்துக்கள் ாழ்ச்சியாகத்தோன்தலும், உயர்தினே மருங்கின் ஒழியாது வருதலும் - உயர்திணைப்பெயரிடத்துத் தன்னுருபு தொகாதே விரிந்து வருதலும், அஃறிணை விரவுப்பெயர்க்கு அ இயல் நிலையலும் - உயர்திணையோடு அஃறிணைவிரவும் பெயர்க்கு அவ்வுருபு அவ்வியல்பிலே நிற்றலும், மெய் பிறிது ஆகு இடத்து இயற்கை ஆதலும்-மெய்பிறிதாய் முடியுமிடத்தில் இயல்பாய் முடிதலும், அன்ன பிறவும் - அத்தன்மையன பிறமுடிபுகளும், தன் இயல் மருங்கின் மெய் பெற கிளந்து பொருள் வரைந்து இசைக்கும் தனது இயல்பாகிய கூற்றால் அகத்தோத்தினுட் பொருள் பெற எடுத்தோதப்பட்ட, வேற்றுமைப்பொருட்புணர்ச்சியது பொதுமுடி வினைத் தான் வரைந்து வேறுமுடிபிற்றாய்நின்று ஒலிக்கும், ஐகார வேற்றுமைத் திரிபு என மொழிப - ஐகாரவேற்றுமையினது வேறுபாட்டுப்புணர்ச்சி என்று சொல்லுவர் புலவர். கது. உம். விளக்குறைத்தான் என்பது மெல்லெழுத்து மிகுவழி வல்லெழுத்து மிக் மரங்குறைத்தான் என்பது வல்லெழுத்து மிகுவழி மெல்லெழுத்து மிக்கது. தாய்க்கொலை என்பது இயல்பாமிடத்து மிக்கது. பலாக்குறைத்தான் என்பது உயிர் மிக வருவழி உயிர் கெட்டது. வண்டுகொணர்ந்தான் என்பது சாரியை உளவழிச் சாரியை கெட்டது. வண்டினைக்கொணர்ந்தான் என்பது சாரியை உளவழித் தன்னு ருபு நிலையிற்று. புளிகுறைத்தான், புளிக்குறைத்தான், ஆல்குறைத்தான், ஆற்குறைத் தான் என இவை சாரியையியற்கை உறழத்தோன் றின. நம்பியைக்கொணர்ந் தான் என்பது உயர்திணைமருங்கின் ஒழியாது வந்தது. கொற்றனைக்கொணர்ந்தான் என்பது விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையது. மண்கொணர்ந்தான் என்பது மெய் பிறிதாகிடத்து இயற்கையாயது. அன்ன பிறவும் என்றதனாற்கொள்வன கழிகுறைத்தான், பனைபிளந்தான் என் பன. பிறவும் அன்ன. ஒழியாது என்றதனான், ஒரோவழி ஒழிந்தும் வரும். அவர்க்கண்டு எனவும், "ஒன்னார்த்தெறலும்" எனவும் இவை உயர்திணையுள் ஒழிந்துவந்தன. மகற்பெற்றான் மகட்பெற்றான் என இவை விரவுப்பெயருள் ஒழிந்துவந்தன. இவ்விலேசுதன் னானே, இவற்றின் முடிபுவேற்றுமையும் கொள்க.