பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் தோகைமரபு. சுக உ-ம். உரிக்குறை, கலக்குறை,, தொடிக்குறை, கொட்குறை, காணிக்குறை, காற்குறை, எனவரும். 'முன்' என்றதனான், பொருட்பெயரோடு புணரும்வழியும் வேற்றுமைமுடிபு எய்துகவென்பது. கலப்பயறு எனவரும். 'நிறைய' என்பதனால், கூறு என்பதன்கண்ணும் வேற்றுமை முடிபு எய்து மென்பது. நாழிக்கூறு எனவரும். (உச) ளகா எ. குற்றிய லுகரக் கின்னே சாரியை. இது, வேற்றுமைமுடிபு விலக்கி இன் வகுத்தமையின் எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- குற்றியலுகரத்திற்கு-குற்றுகரவீற்று அளவுப்பெயர் முதலியவற்றிற்கு, சாரியை இன்-(குறையொடு புணரும்வழி வரும்) சாரியை இன். உ-ம். உழக்கின்குறை, கழஞ்சின்குறை, ஒன்றின் குறை எனவரும். ['குற்றியலுகரத்திற்கு' என்பது 'குற்றியலுகரக்கு' என விகாரப்பட்டுநின்றது. அஃது ஆகுபெயர், அவ்வீற்று அளவுப்பெயர் முதலியவற்றிற்கு ஆயினமையின். ஏகாரம் அசை.] ளசா அ. அத்திடை வரூஉங் கலமென் னளவே. இதுவும் அது. (உரு) இ-ள்:- கலம் என் அளவு இடை அத்து வரும்-கலம் என்னும் அளவுப்பெயர் குறை யொடு புணரும்வழி) இடையில் அத்து வரும். உ-ம் கலத்துக்குறை எனவரும். இது 'கலன்' என்னும் னகாவீறேல், நிலைமொழி ஒற்றுக்கேடும் வருமொழி ஒற் றுப்பேறும் அத்தே வற்றே' [ புணரியல் - ஙுக] என்பதனாற் கொள்ளப்படும். 'கல னெனளவு' என ஓதாதது செய்யுளின்பம் நோக்கிப்போலும். சாரியை முற்கூறிய வதனான், இன்சாரியை பெற்றவழி முன் மாட்டேற்றான் எய்திய வல்லெழுத்து வீழ்க்க. (உசு) ளகாக. பனையெ னளவுங் காவெ னிறையும் நினையுங் காலை யின்னொடு சிவணும். இதுவும் அது. இ-ள்:-பனை என் அளவும் கா என் நிறையும் - பனை என்னும் அளவுப்பெயரும் கா என்னும் நிறைப்பெயரும், நினையும் காலை இன்னொடு சிவணும் - (குறை என்பத னொடு புணருமிடத்து) ஆராயுங்காலத்து இன்சாரியையொடு பொருந்தும். உ-ம். பனையின் குறை, காவின் குறை எனவரும். 'நினையுங் காலை' என்றதனான், வல்லெழுத்துப்பேறும் சிறுபான்மை கொள்க. பனைக்குறை, காக்குறை எனவரும். (உஎ)