பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அச தொல்காப்பியம் - இளம்பூரணம் மூன்றுபெயர்ச்சொல்லும் மேற்கூறிய யா முதலிய மூன்றனொடும் ஒருதன்மையவாய் வல்லெழுத்துப்பெறாது மெல்லெழுத்துப்பெற்று முடிதலுமுடைய. ஆவும் மாவும் அகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா னகரம் ஒற்றும்-அவற்றுள் ஆவும் மாவும் முன்பெற்றுநின்ற அகரமும் வல்லெழுத்துமாகிய அவை அவ்விடத்து நிலைபெறாவாய் னகரமொற்றாகப் பெற்றுமுடியும். உ-ம். மா அங்கோடு, செதிள், தோல், பூ எனவும்; ஆன்கோடு, மான்கோடு, செவி, தலை, புறம் எனவும் வரும். "அறிய" [உயிர்மயங்கியல் - உச) என்றதனால், சிறுபான்மை மாங்கோடு என அகரமின்றியும் வரும். இனி 'அவண்' என்றதனால், காயாங்கோடு, ஆணாங்கோடு, நுணாங்கோடு என்றாற்போலப் பிறவும் பிறவும் மெல்லெழுத்துப் பெறுதலும்; அங்காக் கொண்டான், இங்காக்கொண்டான், உங்காக்கொண்டான், எங்காக்கொண்டான் என இவ்வீற்று ஏழாம் வேற்றுமை இடத்துப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கள் வல்லெழுத்துப்பெறுதலும்; ஆவின்கோடு, மாவின்கோடு எனச் சிறுபான்மை இன் பெறுதலும், பெற்றவழி வல்லெழுத்து வீழ்வும் கொள்க. 'அவற்றோரன்ன' என்ற மாட்டேற்றால் பெற்றுநின்றது மெல்லெழுத்தாகலின், 'அகரம் வல்லெழுத்தவைய வணிலையா' என்று ஒதற்பாலதன்றெனின், மேல் "ஊவென் னொருபெய ராவொடு சிவணும் [உயிர்மயங்கியல் - கூஎ) என்றவழி, அம்மாட்டேற்றானே அதன்வல்லெழு த்து வீழ்வும் கொளல்வேண்டித் "திரிந்ததன்றிரியது" என்னும் நயத்தானே மெல் லெழுத்தை வல்லெழுத்தாக ஓதினானெனக்கொள்க. {} உஙஉ. ஆனொற் றகரமொடு நிலையிட னுடைத்தே. இஃது, அவ்வீற்றுள் ஆ என்றதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. இள்: ஆன் ஒற்று அகரமொடும் நிலை இடன் உடைத்து-முன்புபெற்றுநின்ற ஆன் என்னும் சொல்லினது னகரவொற்று அகரத்தொடும் நிற்கும் இடனுடைத்து. 'இடனுடைத்து' என்றதனான், வன்கணம் ஒழிந்தகணத்து இம்முடிபெனக் கொள்க. உ-ம்."ஆனநெய்தெளித்து நான நீவி" எனவரும். 'அகரமொடும்' என்ற உம்மையான், அகரமின்றி வருதலே பெரும்பான்மை எனக்கொள்க. (120) உஙங. ஆன்முன் வரூஉ மீகார பகரம் தான்மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே. இஃது, இன்னும் ஆ என்பதற்கு எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- ஆன்முன் வரும் ஈகாரபகரம்-ஆன் என்னும் சொல்முன்னர் வருமொ ழியாய்வருகின்ற ஈகாரத்தொடுகூடிய பகரமாகியமொழி, தான்மிக தோன்றி குறுக லும் உரித்து -அப்பகரமாகிய தான் மிகத் தோன்றி அவ்வீகாரம் இகரமாகக்குறுகி முடிதலையும் உடைத்து. தோன்றி" என்றதனால், நிலைமொழிப்பேறாகியனகரவொற்றின் கேடுகொள்க.