முகவுரை
கல்விப் பொதுத் தகுதிப் பத்திரத் தேர்விற்குப் பாடமாய் அமைந்த கைப்பணியானது, எட்டுப்பிரிவுகளைத் தன்னகத்துக் கொண்டது ; அப்பிரிவுகளாவன : நெசவுத் தொழில், வனைதற்றொழில், மரவேலை, அரக்கு வேலை, உலோக வேலை, பிரம்புவேலை, தும்பு வேலை, தோற்றொழில் என்பனவாகும். கைப்பணியெனும் பொதுப் பாடத்துக்குரிய இவ்விரண்டாங் கலைச்சொற்றொகுதியில், மரவேலை, ஆரக்குவேலை யென்பவற்றுக்கான கலைச்சொற்கள் ஒழுங்காகத் தொகுக்கப்பட்டுள்ளன,
சிறப்பாகத் தேர்ந்தெடுத்த பல சொற்களோடு, வழக்காற்றில் வந்துள்ள சொற்கள் சிலவும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளதைக் கவனிக்க. எலவே வுழக்கிலுள்ள இச்சொற்கள் கைப்பணியாளர்க்கு எளிதில் விளங்குந்தகைமையின.
இத்தொகுதியில், பிறமொழிச் சொற்களை ஏற்றவிடத்துத் தமிழொலி முறை வழுவா வண்ணம் எடுத்தாண்டுள்ளோம். இனி, கிரந்தவெழுத்துக்களைத் தவிர்த்துள்ளோம்.
இச்சொற்றொகுதியை ஆய்ந்த குழுவினர் இவராவர் ;—
திரு. இ. கந்தையா | .. | மின்வலு நிலையம், காங்கேயன் துறை |
திரு. ம. வயிரமுத்து | .. | தானிலி மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் |
திரு. செ. கந்தசாமி | .. | கூட்டுறவுத் தொழிற்களரி, யாழ்ப்பாணம் |
திருவாட்டி.. ச. அக்கவெல | .. | கவின்கலைக் கல்லூரி, கொழும்பு |
திரு. பொ. பெருமாள் | .. | கவின்கலைக் கல்லூரி, கொழும்பு |
கலா நிதி. வ. பொன்னையா | .. | கொக்குலில், யாழ்ப்பாணம் |
திரு. ந. லி', மயில்வாகனன் | .. | அரசகருமமொழியலுவலகம் (கல்விப் பிரிவு) |
இத்தொகுதியிலுள்ள சொற்கள் தமிழ் மந்திரக்குழுவினரால் அற்றுக்கொள்ளப்பட்டன.
மா. சே, பெரேரா, துணைத்தலைவர், அரசகருமமொழிப் பகுதி.
- (கல்விப் பிரிவு),
421, புல்லர் வீதி, கொழும்பு 7,
1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் ௳