பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாட்சி-3.} அமலா தி க்யன் 99 &|LD, . ஹிருதயம்! பாபமாகிய சேற்றி லமிழ்ந்த என் ஆன்மா அதைவிட்டு நீங்க முயன்று இன்னும் அதிகமாய் அமிழ் கின்றதே! ஈசனே எனக் குதவி செய்விராக! நான் முயல் கின்றேன். வணங்காத என் முடியால் உமது பாதத்தில் வணங்குகின்றேன். இரும்புபோன்ற என் இருதயத்தை இளங்குழவியின் நரம்பினப்போல் இளகச் செய்கிறேன். எல்லாம் சுபமாய் முடியிலும் முடியலாம் ! (ஒரு புறமாய்ப் போய் முழக்கா ளிட்டுப் பணிகின் முன்.) அமலாதித்யன் வருகிருன். அஞ்சலியஸ் தன யிருக்கின்ருன், அப்படியே கொன்று விட லாம் அரைகூணத்தில் அப்படியே கொல்கின்றேன்-சுவர்க் கத்துக்கனுப்புகின்றேன்; என் பழியைத் தீர்த்தவனுவேனே இதல்ை இது நன்முய் ஆராயவேண்டிய விஷயம். ஒரு பாத, கன் என் தந்தையைக் கொல்கிருன். அதற்காக அவரது ஏக புத்திரகிைய நான் இப்பாபிஷ்டியைச் சுவர்க்கம் அனுப்பு கின்றேன் ! ஐயோ! இது கூலி கொடுத்து உபகாரம் செய்வ தாம் ; பழி வாங்குவ தாகாதே. இவன் என் தந்தையை, இரத்த புஷ்டியுடனும் அவர் செய்த பாபங்க ளெல்லாம் பாவி கிற்கையில், அநியாயமாய்க் கொன்ருன். அதற் குப் பிராயச்சித்தம் அந்த ஈசன் ஒருவனுக்குத் தான் தெரியும், நமது மனத்தின் ஆராய்ச்சிக் கெட்டியவரையில் அது பெரும் பாதகமாம். அப்படி யிருக்க, இப் பாபியை, பரமனை நோக்கித் தியானம் செய்து, தன் பாபங்களை யெல் லாம் கழித்துப் பாலோகம் செல்லச் சித்தமாகும் சமயத்தில் கொல்வேனுயின், நான் தக்கபடி பழி வாங்கினவ னுவேனுே? சி! இது தவறு. கட்கமே பொறு! இந்தத் துராக்மாவைத் தக்கபடி வதைக்கவேண்டிய சமயம் தேடு, குடிவெறியில் மயங்கி உறங்கும்பொழுதோ, கோபாவேசத்தில் - இருக்கும் சமயத்திலோ, கள்ளப் புணர்ச்சியில் கட்டி யணைந்திருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/105&oldid=725097" இலிருந்து மீள்விக்கப்பட்டது