பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.5.) அ ம லா. தி த் ய ன் 127 Gā67. ös, முடி விலாத் துயரத்தால் மூண்டது இப்பித்தம்; அவள் தங் தையின் மாணமே இதற் கெல்லாம் ஆதி காரணம்- ஹா! கெளரீமணி கெளரிமணி ! இதைப் பார் துயரம் சம்பவித் தால் ஒற்றர்கள்போல் ஒவ்வொன்ருய் வருவ தில்லை ; அணி, யணியாகத்தான்வரும். முதலில் அவள் தந்தை கொல்லப்பட் டார் ; பிறகு உனது மகன் போனன்-அவனது கொடுஞ் செய்கையே அவனே நாட்டைவிட்டு கியாயப்படி துரத்தும் படி செய்தது, ஜனங்கள் எல்லாம் குழம்பியிருக்கின்ருர்கள், உத்தமனை பாலநேசன் மரணத்தைப்பற்றி தகாத கெட்ட எண்ணங்களெல்லாம் கொண்டு, இரககியமாய்ப் பேசிக்கொள் ளுகிருர்கள் ; அறிவின்மையால் நாமும் அவனே அவசரமாய் ஒருவரும் அறியாதபடி அடக்கம் செய்துவிட்டோம் ; எந்த அறிவு இல்லாவிடில் காம் அனைவரும் சித்திரங்களுக்குச் சமான மாகிருேமோ அல்லது கிருகங்களென. மதிக்கப்படுகி ருேமோ, அப்படிப்பட்ட ஒள்ளிய அறிவினின்றும், பேதை யாகிய அபலை பிரிக்கப்பட்டாள். முடிவில் இவைகள் எல்லா வற்றையும்விட முக்கியமான விஷயம், இவளது சகோதரன் இரகசியமாய் பிராணேசபுரத்தி லிருந்து வந்திருக்கிருன். அவன், ஆச்சரியத்தையுட்கொண்டவனுய் அந்தர்த்தானமான துபோல் மறைத் திருக்கிருன். அவன் தந்தை மடிந்ததைப் பற்றி அவன் காதில் இரகசியமாய்த் துர்ப்போதனை செய்யும் கோட்சொல்லிகளுக்குக் குறை வில்லை. அதற்குக் காரணம் கூறவேண்டி ஜனங்கள், உண்மை யொன்று மறியாமையால், என்மீதே பழி சாற்றி, எல்லோர் காதிலும் ஒத அஞ்சமாட் டார்கள். ஹா கெளரீமணி கெளரீமணி ! இது ஆயிர முக அஸ்திரத்தைப்போல் என் ஆருயிரை அநேக விடங்களில் அணுவசியமாய் அழிக்கின்றதே ! (உள்ளே சப்தம்) ஐயோ! என்ன சப்தம் இது ? எங்கே என் மஹாராஷ்டிரப் போர்விரர்கள் வாயிலைக் காக் கட்டும் அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/133&oldid=725128" இலிருந்து மீள்விக்கப்பட்டது