பக்கம்:As We Sow-So We Reap.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ඛ3, శ్రీp-కి இ கி. 6).J. శ్రీ "జ్. முற்பகற் செய்யின் (அங்கம் - 3 -ேநல்லவள் ! நல்லவள் -எனக்குத் தூக்கம் வருகிறது. (அப்படியே உறங்குகிமு ன்) ஐயோ! பிராணநாதா ! இப்படியும் உமது புத்தி மாற வேண்டுமா? வனஜா யென்கிற பெயரைக் கேட்டாலும் உமக்குப் பித்தம் அதிகரிக்க வேண்டுமா ? என் பாபமா அது ? ஆயினும் என் முகத்தைப் பார்க்கும்பொழுது உமக்கு வெறுப்புண்டாகாதது என் பாக்கியமே ! உறங் கும் ; காதா இனி உம்மைவிட்டு ஒரு கணமேனும் பிரியேன். இக்கூத்தாடிகளுடன் நானும் சேர்ந்து, உம் மைக் காப்பதே என் முதல் கடனுகக்கொண்டு, காப் பாற்றி வருகிறேன். (பெருமூச்சு விட்டு) சுவாமி யிருக்கிருர் ! எப்படியும் உம்மை இவ்வியாதியி னின்றும் நீக்குகிறேன்-அதென்ன கோஷ்டம்? ஒஹோ ! இந்தக் கூத்தாடிகள் திரும்பி வருகிருற்போ லிருக் கிறதுதெருக் கடத்தாடிகள் குடித்துவிட்டு, தள்ளாடிக்கொண்டு வருகிருர்கள், அடே! இது யாருடா இது ? நம்ப பயித்தியம் கிட்ட உக்கார்துகினு இருக்கிறது ? ஐயா, கான் இந்த-ஆளுடைய பந்து. இவரை இரண்டு வருஷமாகத் தேடி அலைந்து இப்பொழுதுதான் உங்க ளுடன் இருப்பதாகக் கேள்விப்பட்டு, இங்கு வந்தேன். -எனக்குக் கொஞ்சம் பாடத்தெரியும். என்னேயும் உங்களுடன் சேர்த்துக்கொண்டால், புண்ணிய முண்டு. எனக் கிப் பஞ்சகாலத்தில் வேறு ஜீவனமே கிடைக்க வில்லை. எதோ பாடு, பார்ப்போம் கொஞ்சம். அப்படியே. (ஒரு பாட்டைப் பாடுகிருள்.) பலே ! பலே! சவாசு அடே, ஆளும் ஜோக்காயிருக்கரே -எங்களோடே வந்துடு, சாப்பாடு போடரோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/47&oldid=725626" இலிருந்து மீள்விக்கப்பட்டது