பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்.2) பிராம்மணனும் சூத்திரனும் 99 GIT, ᎦfᎥ. ∂ዥ. நான்காவது காட்சி இடம்-தேனும்பேட்டையில் ஹார்டிகல்சால் தோட்டத்தில் ஒரு மூலை; ஒரு பக்கமாக சான்கு பெயர் உட்காாக் கூடிய விசிப்பலகை இருக்கிறது சாம்பழர்த்தி ஐயர் சீதாராமனை அழைத்துக்கொண்டு வருகிருர், சீதாராமா, இப்படி சற்று உட்காருவோம்வா, உனக்கிருக் கும் பலஹீனத்தில் நீ அதிகமாய் நடக்கலாகாது. (இருவ ரும் உட்காருகின்றனர்.) என்ன சீதாராமா, நீ இதையெல் லாம் எனக்கு முன்பே தெரிவித்திருக்கலாகாதா ? எனக்கு சந்தர்ப்பம் ஒன்றும் வாய்க்காமற் போயிற்று. அதுவும் வாஸ்தவம்தான்; உன் பேரிலும் தவறில்லைஇதோ பார்-இவ்வுலகத்தில்- இரண்டு-சிநேகிதர்களுக் குள்-சண்டை சச்சரவு வருவதெல்லாம்-ஒருவருக் கொருவர் தங்கள் மனதிலிருப்பதை வெளியிடாதிருப் பதே மனதிலிருப்பதை மறைத்து வைக்காமல் வெளிப் படையாகக் கலந்துபேசுவார்களாயின், உலகில் நூற்றில் தொண்ணுற்ருென்பது மனஸ்தாபங்கள் அடியுடன் அற்றுப்போம்-இந்த இரண்டு மூன்று நாட்களாக எனக்கும்-உன் பெரியமாமா இருக்கிருனே-பெரிய கிழம் அவனுக்கும் ஓயாத சண்டைஉங்களுக்குள்-என்ன சண்டை ! வேறென்ன ? அவன் உன் பேரில் தான் தப்பிதம் என் முன்-நான் கற்பகத்தின் பேரில் தான் கப்பிதம் என் றேன். ஆயினும் அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், நான் நடந்த உண்மையை யறியாதபடியால் உன் பட்சம் எடுத்துப்பேச சக்தியற்றவனுயிருந்தேன். இப்பொழுது நீ விவரமாய்க் கூறின. பிறகுதான் தெரிந்தது. அதோ அவன் வருகிருன் போலிருக்கிறது. வாட்மிெங்கேஅவன் வாயை அடக்குகிறேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/105&oldid=725686" இலிருந்து மீள்விக்கப்பட்டது