பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மணனும் சூத்திரனும் 107 ä· झै, அதற்காகத்தான்-யோ சித்துப்பார்க்கிறேன் - எனக்கு ஒருவழியும் புலப்படவில்லை. கற்பகம்-காம் டெனிஸ் பந்தயங்களுக்குப் போகும் போது-முன்பெல்லாம்-இன்றைக்கு எப்படியும் ஜெயிப் போம் என்று எனக்குத் தோன்றுகிறது, இன்றைக்குத் தோற்றுப் போவோம் என்று தோன்றுகிறது-என்று ஜோசியம் பார்த்துச் சொல்வாயே! அது அப்படியே நடந்துவந்ததல்லவா ? இப்பொழுது ஜோசியம் பார்த் துச் சொல்-நாமிருவரும் மணந்து சுகமாய் வாழ்வோமா? பரமேஸ்வான் அருளால் ! (சற்று யோசித்து) கடைசிவார்த்தை சொன்னது தான்எனக்கு தைரியம் கொடுக்கிறது. அப்படியே கடக்கு மென என் புத்தியிற் படுகிறது- ஆயினும் அதற்கு முன் நாம் மிகவும் கஷ்டப்படவேண்டி வரும் இருந்த போதி லும் கடைசியில் எல்லாம் நமதிஷ்டப்படியே சுகமாய் முடியுமெனத் தோற்றுகிறது, நீர் சொன்னபடி-ஈசன் அருளால் கண்ணே என் கற்பகமே கற்புடைய உன் மனதில் படு வது எப்படியும் நிறைவேறும்-ஈசன் அருளால் எவ்வ ளவு கஷ்டம் நேரிட்டாலும் நேரிடட்டும் பெரிதல்லகடைசியில் நமது கோரிக்கை கை கூடினுல் போதும் நீ இவ்வளவு கூறியது போதும்; என்மனம்-பூரண உவகை ஏற்றது ! நான் ஏதோ பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். (அவள் கைக்கு முத்தமிடுகிருன்.) (புன்சிரிப்புடன்) என்வாய், பூர்வஜன் மத்தில் எதோபாபம் செய்தாற்போலிருக்கிறது ! (நகைத்து) ஒ!-சீச்சீ மறந்தேன். அந்த வாய்தான் எனக்கு உயிரைக் கொடுத்ததே ! (வாய்க்கு முத்த மிடுகிமுன்.) தாத்தில் வெங்கடேச முதலியாரும் சாம்பழர்த்தி ஐயரும் வருகிருர்கள். ఢీ • விடும் என்னே 1-அவர்கள் அதோவருகிருர்கள் ! (அவனிடமிருந்து பிரித்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/113&oldid=725695" இலிருந்து மீள்விக்கப்பட்டது