பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பிராம்மணனும்-சூத்திரனும் [sri" fa-2 (அங்கிருக்கும் கடியாத்தைப்பார்த்து) அவர்கள் வருவதாகச் சொன்ன மணிகடந்து விட்டதே ! எப்படியும் சீக்கிரம் வந்து விடுவார்கள்-வழியில் என்ன அசந்தர்ப்பமோ ? அவர்கள் மோடார் வண்டி, ஏதாவது கஷ்டம் கொடுத்ததொ என்னவோ ? அதுவும் அது நிரம்ப பழய வண்டி, அதை மாற்றி வெருென்று வாங்கு கிறதுதானே என்று எவ்வளவும் சொல்லியும் அவர்கள் கேட்கிறதில்லை. உங்கள் தகப்பனர் நம்முடைய விவாகத்திற்கு உத்திரவு கொடுப்பார் என்று நினைக்கிறீர்களா நீங்கள் : நான் என்னவோ உறுதியாய் நம்புகிறேன்-நான் அன்று எனக்கிருந்த பயித்தியத்தில் சத்யநாராயண ஐயர் மக ளைத்தான் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்தித்தபொழுது -அவர் முகம் ಗ್ಬಿಹಿ வாடியது. அவர் ஏதோ மறுக்கவாயெடுத்தார் இருமுறை, கானி ருந்த பயித்தியத்தில் அவரை வாயெடுக்கவொட்டாத படி தடுத்தேன். அன்றியும் என் தாயார் தனக்கு ஆட் சேபனையில்லை யென்று கூறிஞர்கள் என்பதை உனக்கு முன்பே சொன்னேனே என் தாயார் வார்த்தைக்கு என் தகப்பனர் குறுக்கு சொல்லமாட்டார்கள். அதற் காகத்தான் என் தாயாரிடம் முன்பு பேசும்படி சின்ன மாமாவிடம் சொன்னேன். உம்முடைய தாயார் வார்த்தைக்கு குறுக்கு சொல்ல மாட்டாரோ-உங்கள் தந்தை ? நான்தான் சொன்னேனே! என் தாயார் மீது அவருக் குள்ள காதல் அளவற்றது. இவ்வளவு வயதாகியும் அவர் கள் பாலியகாதலர்கள் போலவே கடந்து கொள்ளுகிருர் கள், ஷஷ்டி பூர்த்தியாகி சில வருஷங்கள் ஆயினபோதி லும், இன்னும் என் தகப்பனர் வெளியேபோவதென்ருல் அவர்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டு அவர்கள் உத்தி ரவைப் பெற்று தான் போகிருர் தினம் வரும்போதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/126&oldid=725709" இலிருந்து மீள்விக்கப்பட்டது